குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்
ஆசிரியர்:
ந. முருகேசபாண்டியன்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?id=1241-1248-0570-0977
{1241-1248-0570-0977 [{புத்தகம் பற்றி நள்ளிரவு நேரத்தில் ஊரே அடங்கி மெளனமாயிருக்கும்போது, தொலைவில் எங்கோ மெலிதாக எதோ ஒலிக்கும் ஓசை கேட்கும். கூடவே நாய்களின் குரைப்பொலியும். சற்று நேரத்தில் தெருமுனையில் குடுகுடுப்பை ஒலிக்கும்போது, மனம் 'திடுக்'கெனத் துடிக்கும். ஏதாவது கெட்ட சேதியைக் குடுகுடுப்பைக்காரர் சொல்லிவிட்டால் என்ன செய்வது? 'இந்தத் தெருவுல ஒரு பெரிய உசிரு அய்யோன்னு போகப் போகுது' என்று சாமக் கோடாங்கி, சொல்லிவிட்டால் போச்சு. மறுநாள் அதே பேச்சு தெரு முழுக்க மிதக்கும், 'சுடுகாட்டில் பூசை செய்துவிட்டு வரும் கம்பளத்து நாயக்கர் வாக்கினில் ஜக்கம்மா இருக்கிறாள். எனவே அது பலிக்கும்' என்ற நம்பிக்கையானது கிராமத்தினரைப் பாடாய்ப் படுத்தியது. தெரு விளக்கு என்ற பெயரில் குண்டு பல்புகள், வருடத்தில் சில நாட்கள் மட்டும் ஒளிர்ந்த காலகட்டத்தில், எங்கும் பேய்களும், முனிகளும் உலாவிடும் கிராமத்துத் தெருக்களில், தனியொரு மனிதனாக இரவினை ஊடறுத்துச் செல்லும் குடுகுடுப்பைக்காரனின் இயக்கம், விநோதமானதுதான்.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866