குகைகளின் வழியே

ஆசிரியர்: ஜெயமோகன்

Category பயணக்கட்டுரைகள்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 144
ISBN978-93-86737-14-4
Weight150 grams
₹160.00 ₹152.00    You Save ₹8
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஒவ்வொரு குகையும் ஒவ்வொரு அனுபவம், இவற்றில் பெலும் குகை ஓரளவு வசதி செய்யப்பட்டுள்ளது. சட்டிஸ்கர் குகைகள் முழுமையாக கைவிடப்பட்டவை. பல குகைகளில் இருளில் சேற்றில் தவழ்ந்தும் நெளிந்தும் உள்ளே சென்றோம். உள்ளே பார்க்க ஒன்றுமில்லை, உள்ளிருக்கும் உணர்வை அடைவதைத்தவிர, இந்தியாவின் மேலே சென்றுகொண்டிருந்த பயணங்களுக்கு மாறாக உள்ளே ஒருபயணம். அது நம் உள்ளே செல்லும் பயணமும்கூட. சிவனுக்கு குகேஸ்வரன் என்ற பெயர் உண்டு. மனக்குகைகளில் வாழ்பவன். ஓர் இடத்தில் குகையில் சிவலிங்கத்தை இருட்டுக்குள் இருட்டெனப் பார்த்தது நினைவுக்கும் அப்பால் பதிந்திருக்கிறது. வெண்முரசு எழுதும்போது இந்தக் குகைப் பயணம் எந்த அளவுக்கு என்னை ஆழமாகப் பாதித்துள்ளது என உணர்ந்தேன். அர்ஜுனன் ஆழத்துக்குள் செல்லும் அனுபவங்கள் அனைத்திலும் இக்குகை அனுபவங்கள் உள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெயமோகன் :

பயணக்கட்டுரைகள் :

கிழக்கு பதிப்பகம் :