கிலியுகம் - உயிர் உருகும் சத்தம் ( 2 நாவல்கள் சேர்த்து)

ஆசிரியர்: ராஜேஷ்குமார்

Category நாவல்கள்
Publication RK பப்ளிஷிங்
FormatPaper back
Pages 264
ISBN978-1-68523-474-4
Weight250 grams
₹230.00 ₹207.00    You Save ₹23
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கிலியுகம்
இரண்டு கிளைகள் கொண்ட கதை.
முதல் கிளை - கலிவரதன் என்னும் மனநோயாளியின் வித்தியாசமான, விசித்திரமான நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்டு, அவனை குணப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார் மனநல மருத்துவர் மிருத்தியுஞ்சன். அந்த கணத்தில் இருந்து அவர் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் ஆச்சரியத்தில் ஆழ்த்தி, பின் அவருக்கு அச்சம் ஊட்டுபவையாக மாறுகின்றன.
இரண்டாம் கிளை - அரசு இலாக்காகளில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் சிலருக்கு விபரீதமான சம்பவங்கள் நடக்கிறது. அதனால், காவல் துறை அனைத்து திசைகளிலும் விசாரணையை முடுக்குகிறது. பல கட்டங்களுக்கு பிறகுகூட, அந்த விபரீதங்களுக்கு ஊடே இருக்கும் பின்னணியை அறிய முடியாமல் தவிக்கிறார்கள். இந்த கதை, இரண்டு கிளைகளாக தனித்தனியே பயணித்து அவை ஒன்றிணையும்போது நாம் திடுக்கிடுவதை யாராலும் தடுக்கமுடியாது.
உயிர் உருகும் சத்தம்
இதுவும் இரண்டு கிளைகள் கொண்ட கதை தான்.
முதல் கிளை - இரண்டு இளம் பத்திரிக்கையாளர்கள், திண்டல் கிராமத்தில் இருக்கும் அதிசய சக்தி கொண்ட வீட்டை ஆய்வு செய்து தங்கள் பத்திரிக்கைக்கு கட்டுரை ஒன்றை எழுத வருகிறார்கள். நடக்கும் அமானுஷ்யங்களை பார்த்துவிட்டு இப்படியும் நடக்குமா என்று அதிர்கிறார்கள்.
இரண்டாம் கிளை - சென்னையின் ஒரு கோடியில், மர்மமான முறையில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். கொலையாளியை கண்டுபிடிக்கும் பொருட்டு போலீஸ் விசாரணை பல கோணங்களில் நடைப்பெறுகிறது. பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவருகின்றன. அதனால் வழக்கில் முக்கியமான திருப்பங்கள் நிகழ்கின்றன. ஒரு கட்டத்தில், இருகிளைக் கதைளும் ஒரு இடத்தில் சங்கமித்து வேறொரு பாதையில் பயணிக்கிறது. அது உங்களுக்கு இன்னும் அதிர்ச்சி தர வாய்ப்பிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராஜேஷ்குமார் :

நாவல்கள் :

RK பப்ளிஷிங் :