கிரேக்க ஜோதிடமும், அணுகுமுறையும்

ஆசிரியர்: A .பிரகஸ்பதி

Category ஜோதிடம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
Formatpaper back
Pages 240
First EditionJan 1997
Weight200 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 2 cms
₹45.00 $2    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஆய கலைகள் 64 என்பது நமது முன்னோர்களது வாக்காகும். கலைகள் ஒவ்வொன்றும் தனித்தனி சக்தி வாய்ந்தது என்றாலும், மிகப் பழமையானதும், அதி முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அற்புத சக்தி வாய்ந்த கலை என்றால் அது “ஜோதிடக் கலை” என்றே திடமாகக் கூறலாம். காரணம், இதிலுள்ள நுட்பங்கள், விதிமுறைகள் யாவும் தெய்வீக சக்தியால் நிர்ணயிக்கப்பட்டவை. மனிதனது அறிவுக்கூர்மையால், இதனது ஆழத்தை ஓரளவுதான் காண முடியும்; பூரணமான அளவில் யாரும் காண முடியாது என்பது எமது 22 வருட ஜோதிட ஆராய்ச்சியில் கண்ட முடிவாகும்.
இந்திய ஜோதிடக் கலையில் பல நூல்களை எழுதிவரும் எனக்கு, கிரேக்க ஜோதிடக் கலையின் நுட்பங்களையும் ஆராய்ந்து தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென அவா எழுந்தது. அந்த ஆசையின் விளைவுதான் இந்நூல்
கிரேக்க ஜோதிடத்தை முதன் முதலாக கண்டறிந்தவர்கள் பாபிலோனியர்கள்தான். அங்கிருந்துதான் அது மற்ற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது. கி.மு. 4-ம் நூற்றாண்டில்தான், இக்கலை கிரேக்க நாட்டில் பரவ ஆரம்பித்தது. கி.பி. முதல் நூற்றாண்டில் அது ரோமர்களிடையே பரவ ஆரம்பித்தது.


உங்கள் கருத்துக்களை பகிர :
ஜோதிடம் :

மணிமேகலைப் பிரசுரம் :