கிருஷ்ணாவதாரம்

ஆசிரியர்: பாலகுமாரன்

Category சங்க இலக்கியம்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatHard Bound
Pages 564
Weight800 grams
₹400.00 ₹388.00    You Save ₹12
(3% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இனிய சினேகிதங்களுக்கு, வணக்கம். வாழிய நலம்.
சத்தியத்தை மனிதர்களுக்கு காட்ட முடியாது, சத்தியத் திற்கு வரைபடம் இல்லை. அதை உணர்த்தத்தான் முடியும். சத்தியத்தை உணர்த்துவதே இதிகாசங்களின் வேலை.
பரத கண்டம் சத்தியத்தை உணர்த்த கிருஷ்ணர் என்ற மனித ரூபத்தை முன் நிறுத்தியது, ஆனால், இந்த கிருஷ்ணருக்கு வரைமுறையே இல்லை. எல்லைகளற்ற விஷயமே கிருஷ்ணர். சத்தியத்தின் பிரம்மாண்டத்தை எது வேண்டுமானாலும் நிகழ்த்து கின்ற வலிமையை கிருஷ்ணர் என்று உவமித்து ஞானிகள் பேசி யிருக்கிறார்கள்.
கிருஷ்ணர் வரலாறா, தத்துவமா. கிருஷ்ணர் சத்தியத்தின் நிழல். வெளிச்சமும், பொருளும் இருக்க நிழல் பூமியில் இருக்கும். பிரபஞ்ச சக்தி பூமியில் பட்டு நீண்ட நிழலாய் ஒரு வடிவம் ஏற் பட்டது. அவரவர்க்கு தோன்றியபடி அதைப் பற்றிப் பேசினார்கள். கொண்டாடினார்கள்.
கிருஷ்ணரை கடவுள் என்றார்கள். இரண்டானது என்றார்கள். அது ஒன்றே எல்லாமும் என்றார்கள். மாயை என்றார்கள். அறிவின் உச்சம் என்றும் சொன்னார்கள். சத்தியம் அதாவது கிருஷ்ணர் இவை எல்லாமுமாய்தான் இருந்தது.
மனிதகுலம் வளர வளர, கிருஷ்ணரும் வளர்ந்தார். மனித குலம் இருக்கும் வரை கிருஷ்ணரும் இருப்பார். அப்படி கிருஷ் ணரை இறுக்கிக் கொள்ளும் முயற்சிதான், இங்கே கட்டிப் போடும் முயற்சிதான் இந்த கிருஷ்ணாவதாரம்.
கூறியது கூறல் என்ற இலக்கணப் பிழை இங்கு வராது. எவரோ உணர்ந்ததை நான் கவனித்து வேறு விதமாய் உணர்ந்தேன். இதை கவனித்து இன்னொருவர் இன்னொரு விதமாய் உணர்வார். இது உணர்வாளிகளின் வெற்றியா. இல்லை. சத்தியத்தின் வெற்றி. கிருஷ்ணரின் வெற்றி. உருக்க உருக்க வந்து கொண்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

சங்க இலக்கியம் :

விசா பப்ளிகேசன்ஸ் :