கிரியாவின் கரிசல் பயணம்

ஆசிரியர்: பக்தவத்சல பாரதி

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 252
First EditionJan 2020
ISBN978-93-89820-31-7
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹275.00 ₹247.50    You Save ₹27
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


பண்டைத் தமிழ் இலக்கியங்களை இனவரைவியல் அடிப்படையில் ஆராய்ந்து புதிய பார்வையை முன் வைத்தவர் பக்தவத்சல பாரதி. இவரே கி.ரா.வின் இனக் குழுவின் ஒட்டுமொத்த வரைவை ஆராய்கிறார். ஓர் இனத்தைப் பற்றிய வரைவைப் படைப்புகள்வழி மீட்டுருவாக்கம் செய்ய முடியுமென்பதை இந்நூலின் வழி நிறுவுகிறார். கி.ரா.வின் ஒட்டுமொத்தப் படைப்பின் வழி இது சாதிக்கப்படுகிறது. பக்தவத்சல பாரதி, கி.ராவின் படைப்பில் சமூகப் பண்பாட்டு அர்த்தங்களை இனம் காண்கிறார். ! கிரா.வின் படைப்புகளைப் பண்பாட்டுப் பனுவல்களாக எடுத்துக்கொண்டு அதில் கூறப்படும் இனத்தின் தாவரங்கள், விலங்குகள், வாழ்க்கை வட்டச் சடங்குகள், குடும்ப உறவு, விவசாயம், புழங்கு பொருட்களென எல்லாவற்றையும் மீட்டுருவாக்கியிருக்கிறார் பக்தவத்சல பாரதி.
ஓர் இனத்தின் ஆன்மாவை ஊடுருவ நுழைந்து செல்லும் இழையைக் கண்டுபிடிப்பது இனவரைவியல். இதைக் கி.ரா. கண்டடைந்திருக்கிறாரா? ஆம் என்கிறார் பக்தவத்சல பாரதி. வட்டார நாவல்கள்வழி ஒரு பண்பாட்டை ஒருங்கிணைத்துக் காணும் நுட்பத்தை அடையாளம் காண முடியுமென்பதை பக்தவத்சல பாரதி காட்டியிருக்கிறார். தமிழில் இந்தவகையில் இதுவே முதல் நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :