கிராம்ஷி : புரட்சியின் இலக்கணம்

ஆசிரியர்: வ.கீதா எஸ்.வி.ராஜதுரை

Category அரசியல்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper Back
Pages 515
First EditionMay 2016
2nd EditionSep 2017
ISBN978-81-2343-179-6
Weight650 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 4 cms
₹525.00 $22.5    You Save ₹26
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
தேசம், தேசியம், தேச-அரசு, அரசுக்கும் வர்க்கங்களுக்கும் இடையிலான உறவுகள், அரசியல் சமுதாயம், குடிமைச் சமுதாயம் ஆகிய தளங்களில் முன்னெடுக்கப்படவேண்டிய தனிச் சிறப்பான போராட்டங்கள், பொருளாதார நலன்களுக்கான போராட்டங்களுக்கும் முற்போக்குக் கூறுகளைக் கொண்டுள்ள இதர போராட்டங்களுக்கும் இடையில் இருக்கவேண்டிய உறவுகள், முக்கியமாகக் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் அமைப்பாக மட்டு மில்லாது நேச சக்திகளுக்கு வழிகாட்டும் அமைப்பாகவும் இருக்க வேண்டியதன் தேவை ஆகியவற்றைப் பற்றியும் இந்த நூல் பேசுகிறது.
நாம் மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் வாழ்கின்றோம். உலகமெங்கும் பாசிச அரசியல் சக்திகளும், ஜனநாயக விரோதக் கும்பல்களும், அவர்களின் அரசியலை நிர்ணயிக்கும் வடிவமைக்கும் முதலாளித்துவச் சுரண்டலும் வன்முறையும், கம்யூனிச, சோசலிச சக்திகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவுகளும் நம்மை நம்பிக்கை இழக்கச்செய்யும் இந்தத் தருணத்தில் கிராம்ஷிக்குப் பிடித்தமான, தமது மனோதிடத்தை நிலைபெறச் செய்யத் தமக்குத் தாமே அவர் சொல்லிக்கொண்ட ஒரு கூற்றை நினைவுகூர்ந்து அவரின் சிந்தனை உலகத்துக்கு வாசகர்களை அழைக்கிறோம்: 'அறிவாற்றல் மனச்சோர்வை உண்டாக்க, திடமான சித்தமோ நன்நம்பிக்கையைப் புகட்டும்' (pessimism of the intellect, optimism of the will).
- வ. கீதா எஸ்.வி. ராஜதுரை

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.வி.ராஜதுரை :

அரசியல் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :