கிடை
ஆசிரியர்:
கி ராஜநாராயணன்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88+?id=1034-6129-5211-3885
{1034-6129-5211-3885 [{புத்தகம் பற்றி ஐப்பசி கார்த்திகை மாதங்களில் அவருடைய கம்மம்புல்லுக்கு நல்ல விலை கிடைக்கும். அந்தக் காலத்தில் ரூபாய் நோட்டுகளே கிராமங்களில் அமுலுக்கு வராதகாலம். ஆகவே ஒரு ரூபாய் நாணயங்களாகவே கொடுப்பார்கள்; நல்ல சுத்தமான வெள்ளி ரூபாய் நாணயங்கள். அந்த நாணயங்களைப் பெற்றுக் கொள்கிறவர்கள் அவைகளைத் தரையில் - கல்லில் - போட்டுப் பார்த்து (சில கெட்டிக்காரர்கள் ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் சேர்த்து வைத்து அப்படிச் சேர்த்து வைப்பதில் பெருவிரலைக் கொஞ்சம் பதிவாக வைத்துக்கொள்ளணும். ஆள்காட்டி விரலின் வளைவில் வெள்ளி ரூபாய் படுத்திருக்கும். கீழே பதிந்துள்ள பெருவிரலின் நகம் நாணயத்தை ஒரு சுண்டு சுண்டியவுடன் கணீரென்ற ஓசையுடன் சிரித்துக் கரணம் அடித்துக் கொண்டே மேலே போய் உள்ளங்கையில் வந்து விழும்). அந்த ஓசையை வைத்தே சுத்த நாணயம் என்று கண்டு பிடித்துவிடுவார்கள்...
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866