காவிரி : அரசியலும் வரலாறும்

ஆசிரியர்: ஆர்.முத்துக்குமார்

Category அரசியல்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaper back
Pages 192
ISBN978-81-8493-719-0
Weight300 grams
₹175.00 ₹166.25    You Save ₹8
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழக அரசியல் வரலாறு, திராவிட இயக்க வரலாறு உள்ளிட்ட நூல்களை எழுதிய ஆர். முத்துக்குமாரின் புதிய புத்தகம், காவிரி : அரசியலும் வரலாறும்.
மன்னர்கள் ஆண்ட காலத்திலேயே காவிரி ஆறு சிக்கலின் மையமாக இருந்திருக்கிறது. மைசூர், மதுரை மன்னர்களிடையே காவிரியை முன்வைத்து போர்கள் நடைபெற்றிருக்கின்றன. அரண்மனைகளின் சிக்கலாக மட்டுமின்றி விவசாயிகளின் சிக்கலாகவும் காவிரி இருந்திருக்கிறது. காவிரியை முன்வைத்து தமிழ்நாடும் கர்நாடகாவும் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் புத்தகம் அந்த நூற்றாண்டுப் போராட்டத்தின் சமூக வரலாறாக மலர்ந்திருக்கிறது. காவிரிக்காக இதுவரை நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங்கள்; ஒப்பந்தங்கள் மதிக்கப்படாததால் தொடரப்பட்ட வழக்குகள்; வழக்குகளுக்கு நீதி கிடைக்காததால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள்; போராட்டங்களுக்குப் பிறகும் காவிரி உணர்வுபூர்வமான பெருஞ்சிக்கலாக நீடித்திருப்பதற்கான காரணங்கள் என்று மிக விரிவான அறிமுகத்தை இந்நூல் வழங்குகிறது.
காவிரி சிக்கலைப் புரிந்துகொள்வதற்கும் தீர்வுகள் குறித்து விவாதிப்பதற்கும் இந்தப் புத்தகம் உதவும் என்று நம்புகிறேன். கட்சிகள், அரசியல் இயக்கங்கள் ஆகியவற்றின் வரலாற்றைத் தொடர்ச்சியாகப் பதிவுசெய்துவரும் முத்துக்குமார், மதுவிலக்கு, காவிரி என்று சமூகப் பிரச்னைகளின் வரலாற்றையும் கவனித்தில்கொண்டு எழுதிவருவது மகிழ்ச்சியளிக்கிறது.
வாழ்த்துகள், முத்துக்குமார்!

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.முத்துக்குமார் :

அரசியல் :

கிழக்கு பதிப்பகம் :