காலா பாணி

ஆசிரியர்: டாக்டர் மு.ராஜேந்திரன் இ ஆ ப

Category வரலாறு
Publication அகநி வெளியீடு
FormatHardbound
Pages 536
ISBN978-93-82810-70-4
Weight800 grams
₹650.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்திய விடுதலைப் போராட்டத்தின் தியாகச் சரித்திரத்தைத் தொடங்கி வைத்த பெருமை கொண்டது தென்தமிழகம். வீரம் நிரம்பிய அதன் ரத்தச் சரித்திரத்தின் துவக்கப் புள்ளியாய் இருந்த புலித்தேவன், வீரபாண்டிய கட்ட பொம்மு, ஊமைத் துரை, மருது பாண்டியர்களைத் தொடர்ந்து சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவனும் தன் உயிரைத் துறந்தார். தங்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர்களின் நிலை இதுதான் என்று எச்சரிக்கவே பெரிய உடையணத் தேவனையும் போராளிகள் 72 பேரையும் பினாங்கிற்கு 'காலா பாணி' என்றழைக்கப்பட்ட நாடு கடத்தலை ஆயுதமாக்கியது ஆங்கில அரசு.
சொந்த மண்ணை , மக்களை, உறவுகளைவிட்டு, கண்காணாத தேசத்திற்கு அரசியல் கைதிகளாக அனுப்பப்பட்ட 73 பேரின் இறுதி அத்தியாயம்தான் ‘காலா பாணி'. 1801ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி, மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்டவுடன், போராளிகளைக் கைது செய்ததில் தொடங்கி, அவர்களின் இறுதிக் காலம் வரையிலான பதினோரு மாதத் துயர நாள்களை, அந்தக் காலத்திற்கே அழைத்துச்சென்று வாசகர்களையும் அத்துயரத்தினை உணரச் செய்யும் மாயத்தைச் செய்துள்ளார் நாவலாசிரியர் டாக்டர் மு.ராஜேந்திரன் இஆப.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் மு.ராஜேந்திரன் இ ஆ ப :

வரலாறு :

அகநி வெளியீடு :