காலம்

ஆசிரியர்: வண்ணநிலவன்

Category
Publication கிழக்கு பதிப்பகம்
Pages 200
Weight200 grams
$6       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

ஒவ்வொரு நொடியையும், குதிரைப் பாய்ச்சலில் தாவி ஓடிக் கடந்துகொண்டே இருக்கிறது காலம். ஒரு மனிதனின் வாழ்க்கை அதன் ஓட்ட நிழலில் கரைகிறது, அல்லது உயிர்க்கிறது. எல்லா உயிர்களின் ஆதி அந்தமும் தெரிந்த ஒரே சாட்சியமாக காலம் ஒன்றுதான் இருக்கிறது. அது ஒன்றுதான் சாசுவதம். இந்த நாவலில், நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக வேலை பார்க்கும் ஓர் இளைஞனின் வாழ்க்கையில், சிறு பகுதியை விஸ்தாரமாக விவரிக்கிறார் வண்ணநிலவன். நெல்லையப்பன், அவன் குடும்பம், நீதிமன்றத்தில் அவன் சந்திக்கும் மனிதர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், அவன் வேட்கை, காதல்... எல்லாவற்றையும், அதன் இயல்புத்தன்மை கொஞ்சமும் குறையாமல், அதே சமயம் வெகு அழுத்தமாக, வண்ணநிலவன் தொட்டுக் காட்டுகிறார். எல்லா பாத்திரங்களும் ஏதோ ஒரு வகையில், ஏற்கெனவே நமக்கு நன்கு அறிமுகமானவர்களைப் போல இருக்கிறார்கள். அத்தனை பேரில் ஒருவரைக்கூட நம்மால் உதாசீனப்படுத்தவோ, உதறித் தள்ளவோ, வெறுத்து ஒதுக்கவோ முடிய-வில்லை. அவரவர்க்கான நிறை, குறைகளுடன் கதை மாந்தர்களை ஏற்றுக்கொள்ளச் செய்யும் பக்குவத்துக்கு வாசகர்களைக் கொண்டு வந்துவிடுகிறது வண்ணநிலவனின் எழுத்து. பிரசார தொனியாக இல்லாமல், அமர்ந்த குரலில் மானுடத்தை நேசிக்கக் கற்றுத் தரும் எழுத்து. ‘காலம்’ காலம் கடந்து நிற்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :