காலம் எனும் சீட்டுக்கட்டு

ஆசிரியர்: ஆன்டணி சார்லஸ்

Category சினிமா, இசை
Publication பேசாமொழி பதிப்பகம்
FormatPaper Back
Pages 232
Weight300 grams
₹220.00 ₹209.00    You Save ₹11
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866திரைப்பட இயக்குநர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர், தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில், திரைக்கதை மற்றும் இயக்கம் பயின்ற இவர் இயக்கிய மாணவர் குறும்படமான “அகதி" (1998), இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தன் , மகளைத் தேடி இந்தியாவுக்கு வந்த யாழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தான் இனி வெறும் ஒரு அகதி மட்டுமே என்று உணர்வதைப் பற்றியது. கேரளாவில் நடந்த உலகத் திரைப்பட விழாளிப்பைச் செய்த இவர் இயக்கிய முதல் முழுநீளத் திரைப்படம் "நஞ்சுபுரம்" (2011), சாதி வெறி பாம்பின் நஞ்சைவிட தீமையானது என்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், குறிப்பிடத்தக்க முதல், முயற்சியாகப் பரவலான அங்கிகாரத்தைப் பெற்றது. - அடுத்த படமான "அழகு குட்டி செல்லம்" (2016), 'இந்த உலகம் குழந்தைகளுக்காகவே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை விளக்கும் வகையில், குழந்தையை மையப் பிரச்சனை யாகக் கொண்ட பல்வேறு கதைகளை ஒன்றுடன் ஒன்று பிணைத்து உருவாக்கப்பட்டது. விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற இந்தப் படம், நார்வே திரைப்பட விழாவில் "சிறந்த சமூக விழிப்புணர்வுத் திரைப்படம் என்ற விருதைப் பெற்றது. முழுக்க காஷ்மீரில் கடுமையான பனிப் பொழிவுக்கு இடையில் படமாக்கப்பட்ட, இவரது மூன்றாவது திரைப்படமான "சாலை" (2018), இன்றைய இளைஞனின் ஆழ்மனத் தேடலைக் காட்சிப்படுத்துகிறது. நியூ ஜெர்ஸி திரைப்பட விழாவில் பங்கேற்று சிறப்பு விருதையும் பெற்றிருக்கிறது. ஆன்டணி சார்லஸ் 2010 முதல் இணையத்தில் சினிமா தொடர்பான கட்டுரைகளை எழுதி வருகிறார், 'வார்த்தைகள்' என்ற வேர்டுபிரஸ் பிளாக்கில் இவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள் , ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களால் பாராட்டப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சினிமா, இசை :

பேசாமொழி பதிப்பகம் :