காலம் உங்கள் காலடியில்

ஆசிரியர்: சோம வள்ளியப்பன்

Category சுயமுன்னேற்றம்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 184
ISBN978-81-8368-023-3
Weight200 grams
₹200.00       Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நமது லட்சியமும் உழைப்பும் எத்தனை சிறப்பானவையாக இருந்தாலும் வெற்றியின் சூட்சுமம், நேரத்தை எத்தனை சிறப்பாகப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் ஒளிந்திருக்கிறது. நேர நிர்வாகம் பிடிபட்டு விட்டதென்றால், நீங்கள் வெற்றியின் வாசல்படியைத் தொட்டுவிட்டதாக அர்த்தம். இந்தப் புத்தகம் உங்களை கையைப் பிடித்து அந்த வாசல் படிக்கு அழைத்துச் செல்கிறது. சோம. வள்ளியப்பன், தமிழகத்தின் முக்கியமான மேனேஜ்மெண்ட் குரு. பெப்ஸி, வேர்ல்பூல் போன்ற பன்னாட்டு நிறுவனங்களிலும் பி. எச். ஈ. எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலும் உயரதி காரியாகப் பணியாற்றியவர். பல்வேறு கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களுக்குச் சிறப்புச் சொற்பொழிவுகள் மூலம் நவீன மேலாண்மைத் துறையில் பயிற்சி அளிப்பவர். தமது தினமணி நடுப்பக்க கட்டுரைகள் மூலம் மிகவும் சிலாகிக்கப்படும் எழுத்தாளர். தொட்டதெல்லாம் பொன்னாகும், உலகம் உன் வசம் ஆகிய இவரது மனிதவள மேம்பாட்டு நூல்கள் கண்ட மாபெரும் வெற்றிகளைத் தொடர்ந்து இப்போது, காலம் உங்கள் காலடியில் வருகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சோம வள்ளியப்பன் :

சுயமுன்னேற்றம் :

கிழக்கு பதிப்பகம் :