கார் நாற்பது களவழி நாற்பது முதுமொழிக் காஞ்சி

ஆசிரியர்: கா.ர. கோவிந்தராஜ முதலியார் , கா.இராமசாமி நாயுடு

Category அகராதி
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaperback
Pages 104
Weight150 grams
₹95.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கார் நாற்பது என்பது சங்கத்துத் தொகை நூற்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்பனவற்றுண் மூன்றாவதாகிய பதினெண்கீழ்க்கணக்கிற் சேர்ந்தது. இப்பதினெண்கீழ்க்கணக்கிற் சேர்ந்த நூற்கள் பதினெட்டில் பதினேழு நூற்கள் இன்னவை என நன்கு துணியப்பட்டு வந்தன. ஒன்று மாத்திரம் அங்ஙனம் இன்னதெனத் துணிந்துரைக்கக் கூடாததாயிருந்தது. அப்பதினெட்டு நூற்களையுங் குறிக்கும் வெண்பா வருமாறு:
“நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி - மாமூல மின்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு."
அந்நூல் இன்னதெனக் கொள்ளவேண்டி இவ்வெண்பாவினுக்குப் பலரும் பலவாறு பொருள் கூறிவந்தனர். சிலர் இவ்வெண்பாவின் ஈற்றடியிலுள்ள கைந்நிலை என்னுஞ் சொல்லை நோக்கிக் ‘கைந்நிலை' என்னு நூலே அஃதெனக் கூறி அத்தொகையைச் சரிப்படுத்தினர். யான் அவர் கருத்தைப் பின்பற்றிக் களவழி நாற்பதின் முகவுரையில் அங்ஙனமே பதினெட்டு நூற்களைக் குறித்தேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அகராதி :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :