காமதேனு
ஆசிரியர்:
பாலகுமாரன்
விலை ரூ.130
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81?id=1014-4336-6613-9542
{1014-4336-6613-9542 [{புத்தகம் பற்றி விடியல் நேரத்தில் இடிமுழக்கத்தோடு மழை பெய்ய ஆரம்பித்து தூக்கம் கலைந்து போயிற்று.

ஜன்னலுக்கு வெளியே சோடியம் விளக்கொளியில் தாரையாய் மழை பெய்வது பார்த்து அகிலா சந்தோஷப்பட்டாள்.

இது இயற்கையின் கொடை, கடவுளின் அன்பு. மேகத்தின் முத்தம். வருணனின் காதல். வாயுவின் பூஜை. பூமிக்கு கிடைத்த சீதனம், விதம் விதமாய் வார்த்தைகள் உள்ளுக்குள் பொங்கி எழுந்தன.

மழை இன்னும் பலக்க ஆரம்பித்தது. காற்று சுழன்று அடித்தது. உள்ளுக்குள் சில்லென்று நீர் கலந்த காற்று முகத்தை மூடியது.

எழுந்து அவசரமாய் ஜன்னல் நோக்கி நகர, புடவை நழுவிக் கிடந்தது. குனிந்து புடவையை வாரி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அவள் ஜன்னலின் ஒருகதவை சார்த்தினாள். இன்னொரு பக்கம் சார்த்த மனமில்லாமல் அங்கிருந்தபடியே தெருவை வேடிக்கை பார்த்தாள்.

தெருவில் எந்த நடமாட்டமும் இல்லை. தெருவின் இரண்டு பக்கமும் நீர் வேகமாக சுழன்று கலங்கலாக ஓடிக் கொண் டிருந்தது.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866