கான்சாகிபு சண்டை

ஆசிரியர்: நா.வானமாமலை

Category கதைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 130
Weight200 grams
₹130.00 ₹123.50    You Save ₹6
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இக்கதைப் பாடல் எழுத முன்று பிரதிகளைப் பயன்படுத்தி யுள்ளேன். 60 ஆண்டுகளுக்கு முன் வெளியான பழைய அச்சுப் பிரதியொன்று - இது சென்னையில் வெளியானது. இப்பிரதியை மயிலை சீனிவெங்கடசாமி அவர்கள் எனக்கு அனுப்பினார்கள். நெல்லையில் ஒரு கையெழுத்துப் பிரதி கிடைத்தது. இதுவும் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருக்கலாம். அதில் எழுதிய ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது. இவையிரண்டையும் ஒப்பிட்டு இந்தக் கதைப்பாடலில் மூலம் எழுதப்பட்டிருக்கிறது.
முன்னுரை எழுத திருநெல்வேலி கெஜட்டியர், திருநெல்வேலி ஜில்லா சரித்திரம் (கால்டுவெல்) திருநெல்வேலிச் சீமை சரித்திரம், யூசுப்கான் பற்றிய வரலாற்று நூல்கள் பயன் பட்டிருக்கின்றன. இந்நூலை எழுத உதவிய பிரதிகளை அனுப்பிய நண்பர்களுக்கும், இதனை வெளியிட்ட மதுரைப் பல்கலைக்கழகத்திற்கும், அதன் துணை வேந்தர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்களுக்கும் எனது நன்றியையும் நாட்டுப் பாடலில் ஆர்வமுள்ளவர்களின் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

நா. வானமாமலை.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா.வானமாமலை :

கதைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :