காந்திஜியை கொலை செய்வது? ஏன்? எப்படி?

ஆசிரியர்: மு.குலாம் முஹம்மத்

Category வரலாறு
Publication வேர்கள் பதிப்பகம்
FormatPaperback
Pages 40
First EditionJan 2017
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$1.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

இன்று அவர்கள் அடைக்கப்பட்டிருந்தசிறை அறையிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டார்கள். கோட்சேதான் முன்னால் நடந்து சென்றான். அவனுடைய கால்கள் அவ்வப்போது தடுமாறின. அவனுடைய தோற்றமும் நடத்தையும் அவனை பயங்கரமான பதற்றம் பீடித்துக் கொண்டிருக்கின்றது என்பதை வெளிப்படுத்தின. ஆனால் அவன் பார்ப்பவர்களின் கண்களிலிருந்து அதை மறைத்திட பயங்கரமாக முயற்சி செய்தான். “அகண்ட பாரதம்” எனக் கத்திக் கொண்டே தன் பயத்தையும், பதற்றத்தையும் மறைத்திட முயன்றான். அவனுடைய புறத்தோற்றம் அவன் பீதிவயப்பட்டு நிற்கின்றான் என்பதையே காட்டிற்று. அவனுடைய சப்தம் அவன் பெரும் ஆபத்தை எதிர்நோக்குகின்றான் என்ற பீதியை அப்பட்டமாக வெளிக்காட்டியது." கீழ் நீதிமன்றத்திலும், உயர்நீதி மன்றத்திலும் பேசிடும்போது அவன் காட்டிய கம்பீரமும், கர்ச்சனையும் தூக்கு கயிற்றைக் கண்டதும் காணாமற்போயின. கோட்சேயின் பதற்றத்தையும், பதைபதைப்பையும் கண்ட அப்தி, தனது வீரத்தை வெளிப்படுத்தி, கோட்சேயின் பதைபதைப்பைத் தணிக்க முயன்றான்.
இன்றைய பாசிஸ்டுகளின் தேசபக்த வேஷத்தை தோலுரித்துக் காட்டும் வகையில் முன்பு நாம் நிறுவி நடத்தி வந்த மனித நீதி பாசறை சென்னையில் ஒரு பொது கூட்டம் நடத்திற்று. கூட்டம் நடந்த செய்தியை நாம் விடியல் வெள்ளி பிப்ரவரி 2003 இதழில் வெளியிட்டிருந்தோம். அப்போதே வாசகர்கள் அது நூலாக வரவேண்டும் என விருப்பம் தெரிவித்தார்கள். அதை இப்போது நாம் நடத்தி வரும் 'வைகறை வெளிச்சம்’ மாத இதழில் அதிகத் தகவல்களுடன் வெளியிட்டோம். அதையே இப்போது நூலாகத் தருகின்றோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :