காதல் செய்யாதவர்கள் கல் எறியுங்கள்

ஆசிரியர்: நெல்லை கண்ணன்

Category கணிப்பொறி
Publication கலைஞன் பதிப்பகம்
FormatHardBound
Pages 80
First EditionJan 2016
Weight400 grams
Dimensions (H) 17 x (W) 1 x (D) 17 cms
$5.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இறங்கித்தான் வருகிறார்கள் அவதார புருஷர்கள். இறங்கித்தான் சேவை செய்திருக்கிறார்கள் மகான்கள். இறங்கி வருவதுதான் அவர்களின் ஏற்றத்தைக் காட்டுகிறது. வாசகர்களுக்கு மூளைச் சோம்பலை வளர்த்துவிட்டிருக்கும் இக்கால இலக்கியச் சூழலில், அமுது குழைத்துட்டும் அன்னை மாதிரி. அழகான கவிதைகளை எளிமையாய் குழைத்தட்டும் முயற்சிதான் இந்நூல். கமண்டலத்தில் காவிரியை அடக்கிய முனிவன் போல் தனக்குள் முத்தமிழும் மொத்தமாய் அடக்கியவர் - நெல்லை கண்ணன், விருத்தங்கள், வெண்பாக்களில் விளையாடுபவர் இவர். கம்பனைப் பேசினால் கம்பனாகவும், மாணிக்கவாசகனைப் பேசினால் மாணிக்கவாசகனாகவும் - குறுக்குத்துறை இரகசியத்தில் புதுமைப்பித்தனாகவும் அடிக்கடி அவதாரம் மாற்றியவர் - இப்போது காட்டும் முகமோ கவிதை முகம். அறிமுகமான முகத்தில் ஒரு புது முகம், அரிதாரக் கவிதைகளுக்கு மத்தியில் அரிதான கவிதைகள் இவை, இக்கவிதைகளால் காதல் மகிழ்ச்சியடையும், தன்னைப் பாட ஒருவர் கிடைத்தமைக்கு. விருத்தங்கள் வருத்தம் கொள்ளும் - எங்கே இவர் நம்மை மறந்துவிடுவாரோ என்று. இக்கவிதைகளை டி.கே.சி. படித்திருந்தால் - காணாமல் போன முத்தொள்ளாயிரக் கவிதைகளுக்கு வருத்தப்பட்டிருக்கமாட்டார். இதைப் படிக்கவேண்டாம்; பருகுங்கள்,

உங்கள் கருத்துக்களை பகிர :