காதல் சிறகு

ஆசிரியர்: பாலகுமாரன்

Category நாவல்கள்
FormatPaperback
Pages 432
Weight350 grams
₹190.00 ₹180.50    You Save ₹9
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here'காதல் சிறகு' பற்றி பாலகுமாரன்... காதல் சிறகு பிறந்த கதையை நாவலாசிரியர் பால குமாரன் சொன்னார். 'தேவி' மணி அவருடன் உரை யாடிய போது....மணி: பாலகுமாரன் வணக்கம். எப்படியிருக்கிறீர்கள். உங்கள் மகளின் திருமணம் நடந்ததாகக் கேள்விப் பட்டேன். பாலகுமாரன்: வணக்கம், மணி. நலமாக இருக்கிறேன். கடந்த மார்ச் மாதம் என் மகளின் திருமணம் இறை யருளால் குருவருளால் விமரிசையாக நடந்து முடிந்தது. | ஆன்மீகச் செல்வர்களும், திரையுலக ஜாம்பவான்களும், அரசு உயர் அதிகாரிகளும், வாசகர்களும் திருமணத்தில் கலந்து கொண்டு என் மகளையும், மாப்பிள்ளையையும் ஆசீர்வதித்தார்கள். என் மகள் தன் கணவருடன் நலமே குடித்தனம் செய்து கொண்டிருக்கிறார். உங்கள் விசாரிப் புக்கு நன்றி. மணி: 'தேவி' க்கு என்ன எழுதப் போகிறீர்கள். பாலகுமாரன்: நான் என்னைச் சுற்றியுள்ள விஷயங் களை உற்று நோக்கித் தான் எழுதுகிறேன். என் மகள் திருமணம் நடந்து முடிந்து அவளை மும்பை விமான நிலையத்தில் வெளிதேசத்திற்கு வழி ஏற்றப் போகும் போது மனம் விண்டு போயிற்று. ஒருமகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால், திருமகள் போல வளர்த்தேன் .செங்கண்மால் தான் கொண்டு போனான். - என்கிற பாசுர வரிகள் தான் ஞாபகம் வந்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :