காட்டில் ஒரு மான்

ஆசிரியர்: அம்பை

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper back
Pages 192
ISBN978-81-87477-04-0
Weight250 grams
₹225.00 ₹168.75    You Save ₹56
(25% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அம்பை என்ற புனைபெயரில் எழுதும் சி.எஸ். லக்ஷ்மி அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து தீவிரமாக இயங்கிவரும் படைப்பாளி. அம்பையின் கதைமொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தொனிகளை அடைந்துவருகிறது. சிறகுகள் முறியும் (1976), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1988) ஆகிய சிறுகதைத் தொகுதிகளுக்குப் பிறகு வரும் இந்தத் தொகுப்பு நுட்பமும் இரகசியமும் கவிந்த சில தருணங்களை, நிலைகளைத் தீண்டித் திறக்கிறது. அம்பையின் சிறுகதைகள் தமிழில் பெண் நிலை நோக்கின் முதல் கலாபூர்வமான வெளிப்பாடுகளாகக் கருதப்படுகின்றன.
தமிழ் இலக்கியத்தில் பெண்கள் பற்றிய ஓர் ஆராய்ச்சி நூலையும் (Face Behind the Mask, 1984) எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலும் (A Purple Sea) வெளிவந்துள்ளது. மும்பையில் வசிக்கும் அம்பை, பெண்கள் பற்றிய ஆய்வுக்கான ஆவண மையத்தின் (Sound and Picture Archieves for Research on Women: SPARROW) இயக்குனர்.


உங்கள் கருத்துக்களை பகிர :
அம்பை :

சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :