காடு

ஆசிரியர்: ஜெயமோகன்

Category நாவல்கள்
Publication தமிழினி
FormatHardbound
Pages 448
Weight450 grams
₹490.00 ₹441.00    You Save ₹49
(10% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்நாவலின் பல பக்கங்களை வாசகன் விரைவாக கடந்து சென்றுவிடக் கூடும். ஆனால் நுட்பமான மௌன இடைவெளிகளினாலான இந்நாவலை அவன் கூர்ந்து படித்து அர்த்தப்படுத்திக் கொண்டு முன்னகர்ந்தால் மட்டுமே அவனால் நாவலை உள்வாங்க முடியும். உதாரணமாக ரெசாலம் போன்ற கதாபாத்திரத்தை மிக மிக குறைந்த சொற்களில் ஆங்காங்கே சில குறிப்புகளை மட்டும் சொல்லி முழுமையான கதாபாத்திரமாக உருவாக்கியிருக்கிறார் ஜெயமோகன். டாக்டர், ஆக்னீஸ் மேரி போன்ற பல கதாபாத்திரங்களை அப்படிச் சுட்டிக்காட்ட முடியும். அதே போல மலையில் கிறிஸ்தவ மதம் ஆற்றும் சேவையின், அதன்மூலம் உருவாக்கும் மிகப்பெரிய சமூக மாற்றத்தின் முழுமையான சித்திரம் மிக மிகக் குறைவான சொற்களில் இந்நாவலில் முழுமையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. நாவலின் அமைப்பு ஒரு வீணை, தேர்ந்த விரல்களே இசையை அடைய முடியும். வாழ்க்கையின் எத்தனையோ தளங்களைத் தொட்டுத் தாவிச் செல்லும் இந்நாவலை வாசகன் மிகுந்த கவனத்துடன் வாசித்துத்தான் முன்னெடுத்துச் செல்லமுடியும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெயமோகன் :

நாவல்கள் :

தமிழினி :