காடு - இதழ்

ஆசிரியர்:

Category சுற்றுச்சூழல்
Publication தடாகம் வெளியீடு
FormatPaperback
Pages 66
Weight100 grams
₹60.00 ₹54.00    You Save ₹6
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்திய நிலப்பரப்பில் சமீப காலங்களில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் சற்று அச்சமூட்டுவதாக உள்ளன. பசு, ஒட்டகம் போன்ற வளர்ப்பு உயிரினங்கள் இறைச்சிக்காக விற்கப்படுவதை தடுக்கும் சட்டம் சமீபத்தில் இயற்றப்பட்டுள்ளது, ஒரு மக்களாட்சியில், நாட்டிலுள்ள சராசரி குடிமகன் உண்ணும் உணவு அவனுடைய தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. அதனைக் கட்டுப்படுத்தும் உரிமை அரசுகளுக்கு இல்லை. இதனைப் புரிந்து கொள்ளாமல் அரசியல் நோக்கங்களுக்காக எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவு நாடு தழுவிய மக்கள் போராட்டத்தை அதிகரித்துள்ளது. மாட்டிறைச்சியை உண்டதற்காகவும், மாட்டிறைச்சியை வைத்திருத்த காரணத்திற்காகவும் நடைபெற்ற வன்முறைகள் இந்திய வரலாற்றில் கருப்பு தினங்களாகவே பதியப்பட்டுள்ளன. இது தவிர, நெடுவாசலில் மீத்தேனுக்கெதிராக நடைபெறும் போராட்டம். வட சென்னை கடற்கரையோரத்தில் பதிக்கப்படும் எண்ணெய் குழாய்க்கு எதிராக நடைபெறும் போராட்டம் என இயற்கை வளச்சுரண்டலுக்கெதிரான மக்கள் போராட்டங்களின் பட்டியல் நீண்ட நெடியதாக உள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுற்றுச்சூழல் :

தடாகம் வெளியீடு :