காங்கிரஸ் மகாசபை சரித்திரம்

ஆசிரியர்: பட்டாபி சீதாராமய்யா

Category அரசியல்
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatPaper Back
Pages 573
Weight650 grams
₹300.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வியாபார நோக்கத்துடன் இந்தியாவை வந்தடைந்த சீமைக் கிழக்கிந்தியக் கம்பெனியார், நாட்டில் பெருவாரியான பிரதேசங் களைக் கைப்பற்றி, அவைகளை அரசாளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். கி.பி. 1772ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரிட்டிஷ் சர்க்கார், கம்பெனிக்கு இந்திய வியாபார உரிமைகளைப் புதுப்பிக்கும் பொழுதெல்லாம், அதன் வியவகாரங்களைப் பரிசீலிக்கத் தொடங்கினர். கம்பெனியின் வியாபார நோக்கங்கள் சிறிது சிறிதாக மறையத் தொடங்கி, ஆட்சிப் பொறுப்பு அவர்களுக்கு அதிகமாகவே இங்கிலாந்தில் பலர் கம்பெனியின் அபிவிருத்தி விஷயத்தில் மிகவும் அக்கறை கொண்டனர். இந்தியர் விஷயங்களில் சிரத்தை கொண்ட இரண்டொருவர், தங்கள் நாட்டாரின் தொழில் முயற்சிகள் சுதேசிகளைப் பாதிப்பதாக மட்டுமிருத்தல் கூடாதெனச் சுட்டிக் காட்டவும் முன்வந்தனர். பேராசை பிடித்த கம்பெனிச் சிப்பந்திகள் பலர் அநியாய வழிகளில் கூசாமலிறங்கி திரவியம் சேகரிக்கத் தொடங்கியதை எட்மண்டு பர்க்கு, ஷெரிடன், பாக்ஸ் முதலிய ஆங்கிலப் பிரமுகர்கள் தங்கள் நாட்டினருக்கெடுத்துரைத்தனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அரசியல் :

அலைகள் வெளியீட்டகம் :