கவிக்கோ கவிதைகள் பாகம் -2

ஆசிரியர்: கவிக்கோ அப்துல் ரகுமான்

Category கவிதைகள்
Publication யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்
FormatHard Bound
Pages 720
ISBN9789387854185
Weight800 grams
₹600.00 ₹540.00    You Save ₹60
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இது தொகுப்புகள் வெளிவரும் காலம். ஒரு படைப்பாளியின் பரிணாமத்தையும் பரிமாணத்தையும் முழுமையாகக் காண இத்தகைய தொகுப்புகள் உதவும்.

புகழ்பெற்ற தமிழ்க் கவிஞர்கள் பலருடைய தொகுப்புகள் முழுமையாக வெளிவந்துள்ளன. கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுடைய கவிதை நூல்களின் தொகுப்பு வெளிவரவேண்டும் என்பது நேயர்களின் நெடுங்கால விருப்பம். அதை நிறைவேற்றும் வகையில் கவிக்கோ கவிதைகள் என்ற கவிதைத்தொகுப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். அதில் கவிக்கோவின் 16 கவிதை நூல்களில் 11 கவிதை நூல்கள் மட்டும் இடம்பெற்றுள்ளன.
எஞ்சிய கவிதை நூல்களான முத்தமிழின் முகவரி, விதைபோல் விழுந்தவன், இறந்ததால் பிறந்தவன், ராப்பிச்சை, கவிதை ஓர் ஆராதனை ஆகிய 5 நூல்களைத் தொகுத்து கவிக்கோ கவிதைகள் இரண்டாம் பாகம் என்ற இந்நூலை வாசகர்களுக்கு அளிக்கின்றோம். இதன் மூலம் கவிக்கோ அவர்களின் மொத்த கவிதை நூல்களும் இந்த இரண்டு தொகுதிகளில் இடம் பெற்றுள்ளன. கவிக்கோ அவர்களின் விருப்பமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் கட்டுரை நூல்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிட வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் விரைவில் பூர்த்தி செய்ய உள்ளோம். இறைவன் நாடினால் அத்தொகுப்புகள் விரைவில் வெளிவரும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிக்கோ அப்துல் ரகுமான் :

கவிதைகள் :

யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் :