கள்ளிக்காட்டு இதிகாசம்

ஆசிரியர்: வைரமுத்து

Category கதைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 336
Weight450 grams
₹250.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகள்ளிக்காட்டு இதிகாசத்தின் கடைசி அத்தியாயத்தைக் காலையில் வராகநதிக் கரையோரம் தொடங்கி, மாலையில் வைகை அணையில் முடித்தேன்.
எழுதத் தொடங்குமுன் நீரூறும் கண்களோடு சொல்லிக் கொண்டேன்:
“இந்த அத்தியாயம் எழுதி முடியுமுன், என் இருதயம் உடைந்து போகாமலிருக்கட்டும்; கண்கள் கண்ணீரில் மூழ்கிக் கரைந்து போகாமலிருக்கட்டும்''.
எந்தப் படைப்பும் எழுதிய போது இப்படி என்னை உலுக்கியதில்லை; உயிர்வீங்க வைத்ததில்லை.
என் மனம் உடம்பு நேரம் ஆகியவற்றின் மீது இத்தனை ஆதிக்கம் செலுத்தியதில்லை .
துயரத்தின் முண்டு முடிச்சுகள் இதயத்தில் இப்படி முண்டியடித்து முட்டியதில்லை .
ஏனிந்த அழுத்தம்?
எது காரணம்?
எந்த வாழ்வின் வெளிகளில் இந்தப் படைப்பு உயிர்த்தெழுந்து வந்ததோ அந்த வெளிகளில் என் வாழ்வின் முதல் பதினேழு வயதுவரை நானும் பிறந்து வாழ்ந்தது ஒரு காரணமாயிருக்கலாம்.மனிதர்களின் பல முகங்களை வாழ்க்கையின் பல அடுக்குகளை வறுமையின் பசியை, பசியின் நேர்மையை, கனவுகளை, நிராசைகளை அடையாளங்காட்டிய இன்னொரு முறை வாழ்வதற்கு வாய்ப்பில்லாத அந்த இறந்த காலத்தை மீண்டும் எழுத்துக்களினூடாக வாழ்ந்து பார்க்கும் ஒரு கற்பனை சுகம் காரணமாயிருக்கலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வைரமுத்து :

கதைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :