களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

ஆசிரியர்: மயிலை சீனி. வேங்கடசாமி

Category இலக்கியம்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatHardbound
Pages 146
First EditionMar 2010
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹85.00 $3.75    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தமிழ்நாட்டின் வரலாறு முழுமையாகவும் தெளிவாகவும் சரியாகவும் இன்னும் எழுதப் படாமலிருப்பது தமிழரின் பெருங் குறையாகும். தமிழகத்தின் மிக நீண்ட வரலாற்றில் களப்பிரர் ஆட்சிக்காலம் முக்கியமானது. களப்பிரர் ஆட்சிக் காலம் தமிழ் நாட்டு வரலாற்றில் 'இருண்டகாலம்' ஆக இருந்து வந்தது. ஒரு காலத்தில் களப்பிரர் தமிழகத்தை அரசாண்டார்கள் என்னும் வரலாற்றுச் செய்தியே நெடுங்காலமாக மறைந்து கிடந்தது. வேள்விக்குடிச் செப்பேடு கிடைத்து, இது வெளியிடப்பட்ட பிறகுதான் களப்பிரர் என்னும் அரசர் இருந்தனர் என்றும் அவர்கள் தமிழகத்தை அரசாண்டனர் என்றும் தெரியவந்தது. அதற்குமுன் அப்படி ஒரு அரசர் பரம்பரை இருந்தது என்பதை அறியாமலே இருந்தோம். 1920-ஆம் ஆண்டுக்குப் பிறகு வேள்விக்குடிச் செப்பேட்டு வாசகம் வெளிவந்த பிறகு 55 ஆண்டுகளாகத்தான் களப்பிரரைய் பற்றிக் கொஞ்சங் கொஞ்சமாக அறிந்து வருகிறோம். ஐம்பத்தைந்து ஆண்டுகளாகியும் இன்னும் அவர்களைப் பற்றியே முழு வரலாறு தெரியாமலிருக்கிறது. அறிஞர்கள் களப்பிரரைப் பற்றிச் சில கட்டுரைகள் எழுதினார்கள்.

தமிழகத்தின் பல்வேறு சமயக் கொள்கைகளையும், வரலாற்றுண்மைகளையும் தமிழக மக்கள் நன்குணத்தற்கு வாய்ப்பாக, இலக்கியச் சான்றுகளையும், கல்வெட்டு ஆய்வுக் குறிப்புகளையும் வெளியிட்டுப் புகழ் பெற்றவர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள். தமிழக வரலாற்றில் குறிப்பிடப்பெறும் களப்பிரர் ஆட்சி காலத்துக் கல்வெட்டுச் சாசனங்களோ, செப்பேட்டுச் சாசனங்களோ இன்றி பிற பழம் பொருள் சான்றுகளோ கிடைக்காத நிலையில், அவ்விருண்ட காலத்திய ஒரே சான்றாக விளங்கியவை அக்காலத்துச் சமய இலக்கியங்களேயாகும். வேள்விக்குடிச் செப்பேடு கிடைத்த பிறகே, களப்பிரர்தமிழகத்தை அரசாண்டர் என்ற உண்மையினை வரலாற்றுப் பேராசிரியர்களால் அறியமுடிந்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
மயிலை சீனி. வேங்கடசாமி :

இலக்கியம் :

பூம்புகார் பதிப்பகம் :