கல்வி வள்ளல் காமராசர்

ஆசிரியர்: நெ.து.சுந்தரவடிவேலு

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 96
Weight150 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பொதுமக்களுக்கான கல்வியில் பொதுமக்கள் அக்கறை கொள்ளவேண்டும்; ஈடுபட வேண்டும். இது, மக்கள் நாடியறிந்த பெருந்தலைவரின் குறிக்கோள்.கல்விக் கொள்கையை அரசியலுக்கு அப்பால் உருவாக்கியது காமராசரின் சிறப்பு. அனைத்துக் கட்சியினரின் ஒத்துழைப்பு பெறும் வகையில் கல்வி இயக்கங்கள் நடத்தியது அவரது முதிர்ந்த அரசியல் அறிவின் வெளிப்பாடு.
இருநூறாண்டு காலத்தில் பெற்ற கல்வி வளர்ச்சிக்கு மேலான வளர்ச்சியை எட்டாண்டு காலத்தில் கொடுத்த காமராசரை தந்தை பெரியார், கல்விக் கண்கொடுத்த வள்ளல் என்று போற்றியது சாலப் பொருத்தமாகும்.காமராசரின் திடீர் மறைவு எல்லோருக்கும் ஓர் அதிர்ச்சியை அளித்தது. 'சத்யகங்கை'யின் ஆசிரியரும் எனது இனிய நண்பருமான திரு.பகீரதன் அவர்களின் விருப்பத்திற்கிணங்க காமராசரைப் பற்றி 'தலைவருள் மாணிக்கம்' என்ற தலைப்பில் 1975-இல் புத்தகம் எழுதினேன். அதன் திருந்திய பதிப்பாக கல்வி வள்ளல் காமராசர்' உங்கள் கைகளில்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நெ.து.சுந்தரவடிவேலு :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :