கல்வித் துறையிலிருந்து விடைபெறுகிறேன்

ஆசிரியர்: பொன்னீலன்

Category வாழ்க்கை வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 264
Weight300 grams
₹250.00 ₹225.00    You Save ₹25
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866விடைபெறுகிறேன் என்னும் இந்த நூல் எழுதும் ஆர்வம் எனக்குத் தற்செயலாக ஏற்பட்டதுதான். நான் ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன் 1998 நவம்பர் இறுதியில் என் இனிய தம்பியும் சென்னை ஜீவா பதிப்பக உரிமையாளனுமான செ. சுகுமாரன் திடீரென்று என்னிடம் ஒரு நாள் “அண்ணா உங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, வெளியிடப் போகிறேன்” என்றான். என்னைப் பற்றிய முழு விவரங்கள் உனக்குத் தெரியாதே, எப்படி எழுதுவாய்? என்றேன். நீங்கள் வேலை பார்த்த இடங்களில் எல்லாம் போய்ச் செய்திகள் சேகரிப்பேன் என்றான் “நான் ஓய்வு பெற இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. விவரங்களைச் சேகரித்து நூல் எழுதி வெளியிடக் காலம் போதாதே, வேண்டாம்” என்றேன்.
ஆனால் சுகுமாரன் சொல்லச் சொல்ல என் கடந்த 37 அண்டுகாலக் கல்வித்துறை வாழ்க்கை எனக்குள் “ஊற்றெடுத்துப் பொங்கியது. என்னை நீயே எழுதடா”, என்றது அது. வழுதலாம்தான். ஆனால் உதவிக்கு ஆள் இல்லையே?
என் கவலையை அருமைத் தம்பி ஜோ.தன்ராஜிடம் சொன்னேன். உடனேயே ஒரு இளைஞனை அனுப்பி வைத்துவிட்டார். அவர் பெயர் எஸ்.ஜெ.மைக்கேல் எழிலரசு. ஆசிரியப் பயிற்சி பெற்று வேலை தேடிக்கொண்டிருந்த முதுநிலைப் பட்டதாரி. அவர் என்னோடேயே தங்கி விட்டார் அவர். நூல் எழுதும் பணியை உடனடியாகத் தொடங்கிவிட்டேன். பள்ளிகளைப் பார்வையிடுவதற்கு அரசு வாகனத்தில் நான் செல்லுகின்றபோது, நான் சொல்லச் சொல்ல எழிலரசு குறிப்புகள் எடுத்துக்கொண்டே வருவார். பள்ளிகளிலும், ஓய்வு நேரத்தில் நான் சொல்லச் சொல்லக் குறிப்புகள் எடுப்பார். அலுவலகக் குடியிருப்பில் என் ஓய்வு நேரம் முழுவதும் நான் சொல்ல சொல்லக் எழுதுவார். எந்த சலிப்பும் இல்லாமல் அவர் செய்தப் பணியை நன்றியோடு பதிவு செய்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பொன்னீலன் :

வாழ்க்கை வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :