கல்விச் சிந்தனையாளர் மரியா மாண்டிசோரி
ஆசிரியர்:
ஏற்காடு இளங்கோ
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF?id=1686-8407-9765-3727
{1686-8407-9765-3727 [{புத்தகம் பற்றி கல்வி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக மிக அவசியமான ஒன்று. கல்வி மூலம்தான் ஒரு மனிதன் இவ்வுலகத்தைப் புரிந்து கொள்ள முடியும். கற்றல் என்பது குழந்தைப் பருவம் தொடங்கி முதுமைப் பருவம் முடிய தொடர்கிறது. ஆனால், பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பு என்பது குழந்தைப் பருவத்தில் தொடங்கி இளமைப் பருவத்தில் முடிகிறது. போதிக்கப்படும் கல்வி முறை ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடுகிறது. அதே போல் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. உலகில் பல கல்விச் சிந்தனையாளர்கள் கல்வியானது எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிக் கூறியுள்ளனர். உலகில் உள்ள கல்விப் போதனா முறைகளில் மாண்டிசோரியின் கல்வி முறையும் ஒன்று. இப்புத்தகத்தின் வாயிலாக மாண்டிசோரியின் வாழ்க்கை மற்றும் மாண்டிசோரி கல்வி முறையைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு எனக்குத் தூண்டுதலாக இருந்தவர் கவிஞர் மு.முருகேஷ் ஆவார். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு உதவி புரிந்த திருமிகு தில்லைக்கரசி அவர்களுக்கும், புத்தகத்தைச் செழுமைப் படுத்திக் கொடுத்த நண்பர் திருமிகு. சரவணமணியன் அவர்களுக்கும் எனது நன்றி. மேலும் இப் புத்தகத்தை வெளியிட்ட சாரதா பதிப்பகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்துகளுடன்..

ஏற்காடு இளங்கோ.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866