கல்பனா சாவ்லா

ஆசிரியர்: ஏற்காடு இளங்கோ

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 80
ISBN978-93-80219-79-0
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



விண்வெளிப் பயணம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்தியாவின் சார்பாக ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்று வந்தார். அதன் பின்னர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அமெரிக்காவின் விண்வெளி வீரர்களாக விண்வெளிக்குச் சென்று வந்துள்ளனர். விண்வெளிக்குச் சென்று வந்த கல்பனா சாவ்லா இந்தியாவில் பிறந்து, இந்தியாவிலேயே கல்வி பயின்றவர். தனது முதுகலைப் பட்டப் படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். அமெரிக்காவின் குடியுரிமை பெற்று அமெரிக்கர் ஆகி விட்டார்.
கல்பனா சாவ்லா விமானத் தொழில்நுட்பத்தில் அபாரமான அறிவு கொண்டு இருந்தார். அமெரிக்காவில் விண்கலங்கள் பற்றிய ஆய்வுகளைச் செய்து ஒரு விண்வெளி விஞ்ஞானியாக உயர்ந்தார். கல்பனா துணிச்சல் மிக்கவராகவும், விண்வெளித் துறையில் சிறந்த அறிவாளியாகவும் இருந்தார். இதனால் இவருக்கு விண்வெளி செல்வதற்கான வாய்ப்பு இரண்டு முறை கிடைத்தது. விண்வெளிப் பயணம் என்பது உல்லாசப் பயணம் அல்ல. அது ஆபத்து நிறைந்தது என்பதை கல்பனா சாவ்லாவின் விண்வெளிப் பயணம் நமக்கு உணர்த்துகிறது. கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை இந்தியப் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. சாதிக்க நினைக்கும் பெண்களுக்கும், விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என கனவு காண்பவர்களுக்கும் இவரின் வாழ்க்கை உத்வேகத்தை ஏற்படுத்துகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏற்காடு இளங்கோ :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :