கலையா! கைவினையா!

ஆசிரியர்: ஈரோடு தமிழன்பன்

Category கவிதைகள்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatHard Bound
Pages 80
First EditionMar 2010
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹50.00 $2.25    You Save ₹2
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கவிதையும் கவிதை சார்ந்தவையுமான பொருள்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
நண்பர் மானாமதுரை மாசி அவர்கள் நடத்தி வந்த இலக்கியக் குடும்பம், என்ற இதழின் சிறப்பு ஆசிரியராக நான் இருந்தபோது, அவருடைய விருப்பை ஏற்று அவ்வப்போது கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வந்தேன். அவற்றுள் இத்தொகுப்புக்கென ஐந்து கட்டுரைகளைத் தெரிவு செய்துகொண்டேன். நண்பர் வேணுகோபாலன் அவர்கள் நடத்தி வந்த ‘மியூசிக் வொர்ல்ட்' ஏட்டில் வெளியான 'இருண்ட ஞாயிறும் எழுச்சி முகமும்' என்கிற கட்டுரையும் இத்தொகுப்பில் உள்ளது. எஞ்சியவை, அண்மைக்காலத்தில் நான் எழுதி வைத்திருந்தவை.
இத்தொகுப்பில் உள்ளவை, பெரும்பாலும் ஆங்கிலக் கவிதைகளின் - ஆங்கிலம் வழியிலான பிறமொழிக் கவிதைகளின் ஊடாக நான் பயணம் செய்து கண்ட கவிதை உண்மைகளை, அனுபவங்களை, விமர்சனத் தேடல்களை உணர்த்துபவை.
இன்றைய தமிழ்க் கவிதைகளுக்குள்ளும் இத்தகைய பார்வையைச் செலுத்திக் கவிதைப் பரிமாணங்களை வெளிப்படுத்த எண்ணியிருக்கிறேன். இந்நூலை மெருகு குலையாத வெளியீடாக்கிய பூம்புகார் பதிப்பகத்து உரிமையாளர் அவர்களுக்கு அன்பின் நன்றி.
- ஈரோடு தமிழன்பன்

உங்கள் கருத்துக்களை பகிர :
ஈரோடு தமிழன்பன் :

கவிதைகள் :

பூம்புகார் பதிப்பகம் :