கலைஞர்

ஆசிரியர்: சின்னக்குத்தூசி

Category கட்டுரைகள்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 96
Weight100 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கலைஞரின் பிறந்த நாள் ஆண்டு தோறும் ஜூன் மாதம் மூன்றாம் தேதி உலகெங்கிலும் கொண்டாடப்படும் போது நக்கீரன்- முரசொலி இதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளே இன்று நூல்வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது. கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை அவரே ‘நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார் அது இதுவரையிலும் ஏறத்தாழ 1500 பக்கங்கள் கொண்ட 4 பாகங்களாக 4 நூல்களாக வெளி வந்திருக்கிறது. எனினும் அது 1993-ம் ஆண்டுடன் நிற்கிறதே தவிர ஐந்தாவது பாகத்திற்காக காத்திருக்கிறதே தவிர முழுமையாக எழுதப்பட்டு முடிந்துவிடவில்லை .
அத்தகைய பெருமைக்குரிய நீண்ட நெடிய புகழ்மிக்க வரலாறு கலைஞரின் வாழ்க்கை வரலாறு. கடலின் ஒருதுளி போல கலைஞரின் வாழ்க்கையை படம்பிடித்துக் காட்ட நினைக்கும் முயற்சியே இக்கட்டுரைத் தொகுப்பு நூல். நினைப்பு உயர்வானதாக இருந்திடல் வேண்டும். அந்த நினைப்பை நிறைவேற்ற ஓய்வு ஒழிச்சலில்லாத உழைப்பும் தேவை. இந்த நினைப்பும் உழைப்பும் கலைஞரைப் போல யாருக்கு அமைந் தாலும் அவர்களும் கலைஞரைப் போல் உயர வழியுண்டு என்பதை சுட்டிக் காட்டும் முயற்சியே இச்சிறு நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சின்னக்குத்தூசி :

கட்டுரைகள் :

நக்கீரன் பதிப்பகம் :