கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்

ஆசிரியர்: கலைஞர் மு. கருணாநிதி

Category சிறுகதைகள்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 280
First EditionMay 1982
6th EditionDec 2006
Weight200 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹55.00 $2.5    You Save ₹2
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereவிஞ்ஞான ஆராய்ச்சியிலே அவனுக்கு நிகர் யாருமில்லை. இந்தியாவின் ஈன்ஸ்டின் என்று உபகண்டம் பாராட்டுப் படித்தது. சரித்திர ஆராய்ச்சியின் கரையைக் கண்டவன் அவன். சார்லஸ் ஆண்டபோது நடந்ததைக் கூற வேண்டுமா? ஷாஜகானின் குணாதிசயங்களை ஒன்று விடாமல் சொல்ல வேண்டுமா? நாசர் காலமா? சீசர் வீரமா? எல்லாமே அவனுக்கு மனப்பாடம்! சுருங்கச் சொன்னால் அவனே ஒரு சரித்திரப் புத்தகம் !
இலக்கியத்திலே எதுபற்றி அவனிடம் விவாதிக்க வேண்டும்? எதற்கும் தயார்! கவிதைத் துறையிலே கம்பனா? ஷெல்லியா? காளிதாசனா? டென்னிசனா? பைரனா? பாரதியா? யாரைப் பற்றியும் கருத்துரைகள் வழங்குவதிலே அவனுக்கு நிகர் யாருமில்லை என்பது மட்டுமல்ல; அந்தக் கவிதா மண்டலத்தோடு போட்டியிடவும் திறமை பெற்றவன். பொருளாதாரம் பற்றி விளக்கம் தேவையா? காரல்மார்க்ஸ் அனுப்பி வைத்த தூதுபோலத் தொடங்கிவிடுவான்; பொருளாதாரப் பிரசங்கத்தை. அமெரிக்காவின் ஆஸ்தி என்ன? ரஷ்யாவின் ரகசிய மென்ன? இது போன்ற விவரங்களை மிக எளிதில் கற்றுத்தர வல்லோன்! கணிதத்திலோ மேதை! பூகோளத்துப் புலி! அரசியலிலே அவனோர் பிளேட்டோ! சமுதாயத்திலே சாக்ரடீஸ்! எழுத்திலே பெர்னாட்ஷாஷேக்ஸ்பியர் இருவரின் கலப்பு! இத்தகைய மேதை! புதிய பாதை வகுத்தவன்! அவனது பெயர் கூறவே மக்கள் தயங்குவர்-பெயரைக் கூறுவது அவன் பெருமையை இழிவுபடுத்துமோ என்ற சந்தேகத்தால்! ஆகவே அவனை மேதை என்றே அழைத்தது இந்த மேதினி.

உங்கள் கருத்துக்களை பகிர :
கலைஞர் மு. கருணாநிதி :

சிறுகதைகள் :

பாரதி பதிப்பகம் :