கலைஞர் என்னும் மனிதர்

ஆசிரியர்: மணா

Category வாழ்க்கை வரலாறு
Publication பரிதி பதிப்பகம்
FormatHardbound
Pages 352
ISBN978-81-945797-7-9
Weight950 grams
₹500.00 ₹475.00    You Save ₹25
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கலைஞர் என்னும் மனிதர் என்ற தலைப்பின் கீழ் கலைஞர் அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு முழுமையாக நிறைந்துள்ளாரோ - அதே அளவிற்கு மணா என்னும் பத்திரிகையாளர் என்று தலைப்பு வைக்கும் அளவிற்கு நிறைந்திருப்பவர் மணா என்கிற லட்சுமணன், தமிழ் இதழியலின் நீண்ட பயணத்தில் - ஒரு பத்திரிகையாளராக - படைப்பாளராக - 40 ஆண்டுகள் பயணிப்பதென்பதும் - யாவர்க்கும் தோழனாக இருப்பதென்பதும் பாராட்டப்படவேண்டிய ஒன்று. சிறு பத்திரிகைகளில் கவிதை - சிறுகதை என்று எழுத்துலகத்துக்குள் நுழைந்தவர் - காட்சி ஊடகம் மற்றும் ஆவணப்படங்களின் இயக்குநராகவும் தன்னைப் பதிவு செய்திருப்பவர். பல ஆளுமைகள் குறித்த நூல்களை எழுதியுள்ள மணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்காக - கலைஞர் என்னும் மனிதர் நூல் வழியாக மீண்டும் நம் கரங்களை பற்றிக் கொள்கிறார். நீதியரசர் கிருஷ்ணய்யர் விருது - பி.ராமமூர்த்தி விருது போன்ற முக்கிய விருதுகளைப் பெற்றவர் என்றாலும்கூட .. எல்லா அரசியல் தலைவர்களும் நம்பிக்கை கொண்ட ஒரு இதழியலாளர் என்ற நற்பெயரை சிறந்த விருதாகக் கருதுபவர். இவரின் நீண்ட எழுத்துப் பயணத்தின் அடையாளமாக நாற்பதாவது நூலாக இந்த நூலை வெளியிடுவதில் பரிதி பதிப்பகம் பெருமிதம் கொள்கிறது.

படித்தேன்… பிரமித்தேன்…!
https://www.thaaii.com/?p=83570
பத்திரிகையாளர் மணா எழுதிய ‘கலைஞர் என்னும் மனிதர்’ நூலை சென்னையிலுள்ள அவருடைய வீட்டில் பெற்றுக் கொண்டார் நடிகர் சிவகுமார். அவர் எழுதிய புத்தகங்களையும் மணாவிற்கு பரிசளித்தார்.
பன்முக ஆற்றல் கொண்ட சிவகுமார் திரைக்கலைஞர், மகத்தான பேச்சாளர், எழுத்தாளர், ஓவியர், நுண்ணிய வாசிப்பாளர் என்று பல முகங்களைக் கொண்டிருந்தாலும், எளிமையான முறையில் நட்பைப் பேணுவதிலும் அவர் காட்டும் அக்கறை நெகிழ்வானது.

மணா-வின் ‘கலைஞர் என்னும் மனிதர்’ நூலை வாசித்துவிட்டுக் கைப்பட மணாவுக்கு எழுதிய வாழ்த்து இதோ:
‘கலைஞர் என்னும் மனிதர்’ என்ற நண்பர் மணா தொகுத்துள்ள நூலைப் படித்து பிரமித்தேன்.

காலத்தின் கலைஞன் எம்.ஆர்.ராதா, கமல்: நம் காலத்து நாயகன் போன்ற அவரது பல நூல்களைப் படித்திருக்கிறேன். ஆனால் இந்த நூல் அவரது தொகுப்புகளின் உச்சம்.

நதிமூலம் – கலைஞரை நாத்திகராகிய திருவாரூர் தேர் சவுக்கடிகள் – ‘பராசக்தி’ படம் பற்றி, வசனம் பற்றி உதய் பாடகலிங்கத்தின் ஆய்வுக் கட்டுரை – அசராத வாழ்க்கை – அசுர சாதனை – சோ எழுதிய கட்டுரை என இந்த நூலில் 23 தலைப்புகளில் பேட்டிகளும் கட்டுரைகளும் சர்க்கரைப் பாகில் தேன் கலந்தது போல, எதை படிப்பது எதை விடுவது?
கலைஞர் அவர்களின் அரசியல், கலை, இலக்கிய பங்களிப்பு பற்றி அவரின் எதிரிகள் கூட மறுத்துச் சொல்ல முடியாது.

1942 – ல் ‘முரசொலி’ கையெழுத்துப் பிரதி துவங்கியதிலிருந்து அவரது கடைசி மூச்சு வரை அவர் தடம் பதித்த அத்தனை சம்பவங்களையும் இந்நூலைப் படித்து அறிந்து கொள்ள முடியும்.

இதிலே “அண்ணா! நீங்க சாமி கும்பிட்டீங்களா? என்ன சாமி அது? எத்தனை வருடம் கும்பிட்டீர்கள்?” என்று குறும்பாகத் தொடங்கி 24 பக்கம் நீளும் எனது சுவையான பேட்டியும் அடங்கும்.

இந்நூலைப் படித்து முடிக்கும்போது “எப்பேர்பட்ட மாமனிதர் நம்மோடு வாழ்ந்திருக்கின்றார் என்று மலைப்பு நிச்சயம் ஏற்படும்.”


அன்புடன்,
சிவகுமார்

உங்கள் கருத்துக்களை பகிர :
மணா :

வாழ்க்கை வரலாறு :

பரிதி பதிப்பகம் :