கலைஞரின் குட்டிக் கதைகள்

ஆசிரியர்: கலைஞர் மு. கருணாநிதி

Category கதைகள்
Formatpaper back
Pages 48
Weight50 grams
₹20.00 ₹19.00    You Save ₹1
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒரு வேடன் வேகமாக ஒரு மானைத் துரத்தி வருகிறான். அழகான புள்ளிமான்குட்டி. அது துள்ளி ஓட வேண்டிய தோட்டத்தில் ஓடவிடாமல் அதைக் கொன்றுவிட வேண்டும் என்கிற விருப்பத்தோடு வேடன் துரத்தி வர அது எங்கெல்லாமோ சுற்றி இறுதியாக வள்ளுவரின் இல்லத்திற்குள்ளே நுழைந்துவிட, வாயிற்புறத்திலே உட்கார்ந்து குறள் தீட்டிக் கொண்டிருக்கிற வள்ளுவர், தன்னைக் கடந்து, தன் வீட்டிற்குள்ளே மான்குட்டி சென்றதைக்காணுகிறார். பத்து நிமிடத்திற்குப் பிறகு வேடன் அங்கே ஓடி வருகிறான். வள்ளுவரைப் பார்த்துக் கேட்கிறான். “இந்தப் பக்கம் ஒரு மான்குட்டி வந்ததா?"
பொய் சொல்வதே தீது என்று கருதுகிற வள்ளுவர் என்ன சொல்லியிருக்க வேண்டும்? “ஆமாம். வந்தது. வீட்டிற்குள்ளேதான் இருக்கிறது” என்று சொல்லியிருக்க வேண்டும். சொல்லவில்லை. சொன்னால் வேடன், உள்ளே நுழைந்து அந்த மான் குட்டியை இழுத்துச் சென்று கொன்று தின்றிருப்பான். எனவே 'வரவில்லை' என்கிறார். வள்ளுவரா பொய் சொல்வார் என்று எண்ணிக் கொண்டு வேடனும் வேறு பக்கம் போய்விடுகிறான். "பெருந்தகையே! பொய்யே சொல்லாத தாங்கள் இப்படி ஒரு பொய் சொல்வதற்குக் காரணம் என்ன?"

உங்கள் கருத்துக்களை பகிர :
கலைஞர் மு. கருணாநிதி :

கதைகள் :

பாரதி பதிப்பகம் :