கலைஞரின் கவிதைகள்

ஆசிரியர்: கலைஞர் மு. கருணாநிதி

Category கவிதைகள்
Publication பாரதி பதிப்பகம்
FormatHardbound
Pages 447
Weight600 grams
₹300.00 ₹270.00    You Save ₹30
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கலைஞர் எந்த வகையிலே இப்படிப்பட்ட ஆற்றல் வாய்ந்தவராகத் தன்னை வளர்த்துக் கொண்டார் என்றால் அவர் படித்த அளவுக்குத் தொடர்ந்து இலக்கியங்களைப் படிக்கின்றவர்கள் பலபேர் இல்லை சிலப்பதிகாரமோ சீவகசிந்தாமணியோ புறநானூறோ திருக்குறளோ அவற்றைத் தொடர்ந்து படித்து, எண்ணியெண்ணி உணர்ந்து உணர்ந்து போற்றிப் போற்றி தன்னுடைய உணர்வுகளுக்கு அவற்றை விருந்தாக்கி அந்த உணர்வை வடித்துத் தந்து, அதன் மூலம் தன்னையே உருவாக்கிக் கொண்டவர் கலைஞர். அப்படி உருவாக்கிக் கொண்ட காரணத்தாலேதான் சிலப்பதிகாரத்தைப் பற்றி அவர் கவிதை இயற்றும்போது கருத்து வளத்துடன் ஓசைநயமும் அங்கே பிறந்திருக்கிறது.
கலைஞர் அவர்களுடைய கவிதைகளை எண்ணிப் பார்த்தால் கலைஞர் இடத்திலே கருத்து உண்டு அதை எடுத்துச் சொல்லும் ஆற்றல் உண்டு; அதற்கு அழகு வடிவு தருகிற கலைத்திறன் உண்டு; அதை உணர்வில் பதிக்கும் கவியின் சிறப்பு உண்டு; இவற்றை நாட்டுக்குப் பயன்படுத்துகிற உயர்ந்த குறிக்கோள் உண்டு என்று காணலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கலைஞர் மு. கருணாநிதி :

கவிதைகள் :

பாரதி பதிப்பகம் :