கலிங்கராணி

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category சரித்திரநாவல்கள்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatPaperback
Pages 290
Weight200 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here



அமுதூறும் அழகு தமிழில் சுவையூறும் சொல்லு திர்த்து அரசியல் உலகிலும் இலக்கிய உலகிலும் புகழ்க் கோபுரமாய் நிற்பவர் பேரறிஞர் அண்ணா . இந்நாட்டில் இருபதாம் நூற்றாண்டின் அரசியல் புரட்சி கண்ட அவர், இலக்கிய உலகிற்கும் படைத்தளித்த செல்வங்கள் பல உள். புதினம், சிறுகதை, நாடகம், மடல், கட்டுரை, இதழுரை என்ற வடிவங்களில் எண்ணிக்கையில் இரண்டாயிரத்தைத் தாண்டி நிற்கின்றன; எண்ணத்தால் எக்காலத்தையும் தாண்டி நிற்கின்றன அவரது படைப்புகள். அவற்றுள் ஒன்றே குலோத்துங்கச் சோழனின் கலிங்கப் போரினைப் பின் னணியாகக் கொண்டு புதின வடிவில் பிறந்த கலிங்கராணி. பிறந்தோர் எல்லாம் பெயரோடு வாழ்வதில்லை; வாழ்ந்தாலும் மடிந்தபின் மற்றோர் நினைப்ப வாழ்ந்த தில்லை. இலக்கியங்களுக்கும் இந்நியதி பொருந்தும். புற்றீசலாய்ப் புதினங்கள் தோன்றிய நாளில், அண்ணாவின் புதினப் படைப்புகள் இருள் மண்டிக் கிடந்த தமிழகத்தில் ஒளி வீசிய இளஞ் ஞாயிற்றுக் கதிர்கள். அண்டம் உள் ள ள வும் ஆதவன் உலவுவது போல, அவரது படைப்புகள் இளைய தலைமுறைகளின் ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றியும், அவ்வெதிர் காலத்திற்கு இடையூராய் அமைகின்ற நிகழ்காலத்தைப் பற்றியும், இந்நிகழ்காலச் சீரழிவுக்கு அடிகோலிய இறந்த காலத்தைப் பற்றியும் இயம்பிய வண்ணம் இருப்பன.

அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொதுமேடை வானில் முன்பு ஒளிர்ந்த மின்மினிகள், விண் மீன்கள், பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப் புதுப்பொழுது மலரச் செய்யும் 'வெங்கதிரவன்' அண்ணா அவர்களே என்பதை அறியாதவர் இலர். எழுத்துத் துறையிலும் சுவை குன்றாது, எப்பொருள் பற்றியும் அறிவுப் பயன் நிறைவுறும் வண்ணம், எத்தனைப் பக்கம் வேண்டுமானாலும் எழுதும் திறன் அவர் தனியுரிமையே ஆகும். எழுத்துக்கு ஒரு நடை, மேடைப் பேச்சுக்கு ஒரு நடை, உரையாடலுக்கு ஒரு நடை என்பது அவரிடம் காணமுடியாது. இருந்தால் இருப்பார்; எழுந்தால் எதிலும் ஒரே காளமேகந்தான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

சரித்திரநாவல்கள் :

பூம்புகார் பதிப்பகம் :