கலாமின் இந்தியக் கனவுகள்: அறிவியல் புரட்சிக்கான அடித்தளம்

ஆசிரியர்: ஏ.பி.ஜே அப்துல் கலாம் Y.S ராஜன் தமிழில் : ஸ்ரீப்ரியா ஸ்ரீநிவாசன்

Category அறிவியல்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 280
First EditionJul 2017
ISBN978-81-8493-794-7
Weight350 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click HereThe Scientific Indian நூலின் அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பு.

நாம் வாழும் உலகை அறிவியல் பார்வையோடு புரிந்துகொள்ள உதவும் 21ம் நூற்றாண்டு வழிகாட்டி இந்நூல். அறிவியலின் அடிப்படைகளை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாகவும் விரிவாகவும் அறிமுகப்படுத்தும் நூலும்கூட. அறிவியலின் துணை கொண்டு சமூகப் பிரச்னைகளைத் தீர்க்கமுடியும் என்னும் நம்பிக்கையை இது நமக்கு அளிக்கிறது.

· இந்திய விவசாயத்தின் மிக விரிவான தெளிவான சித்திரம்; விவசாயம் நசிந்துவரும் நிலையில் அதை மீட்டெடுக்க கலாம் முன்வைக்கும் ஆழமான யோசனை
· இந்திய மீன் வளம் பற்றிய அலசல்; மீனவர் பிரச்னைகளுக்கான தீர்வுகள்; மீனவர்கள் வாழ்வில் ஒளியேற்ற செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு
· எரிபொருள், மின்சாரம், தண்ணீர் என நம் தேசம் எதிர்கொண்டுவரும் பிரச்னைகளின் தீவிரம் மற்றும் அவற்றுக்கான எளிய நடைமுறை
சாத்தியமான தீர்வுகள்
· மருத்துவம் சுகாதாரம் போன்ற துறைகளில் மேற்கொள்ளவேண்டிய சீர்திருத்தங்கள், பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள்

இப்படி, அறிவியலும் சமூகமும் ஒன்றிணையும் புள்ளிகளை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டுகிறது இந்நூல்.

மேலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சுருக்கமான சுவாரசியமான வரலாறும் இந்திய ராணுவ நடவடிக்கைகளில் செயற்கைக்கோள்களின் பங்கும் இதில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அடிப்படை வசதிகளே பூர்த்திசெய்யப்படாத ஒரு தேசத்துக்கு சந்திரயானும் இன்னபிற விண்வெளி ஆய்வுகளும் தேவைதானா என்னும் கேள்விக்கு இந்நூல் ஓர் ஆணித்தரமான பதிலாகவும் இருக்கிறது.

அப்துல் கலாமும் Y.S ராஜனும் முன்வைத்திருக்கும் கனவை நம் கனவாகவும் நாம் வரித்துக்கொண்டால் இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏ.பி.ஜே அப்துல் கலாம் :

அறிவியல் :

கிழக்கு பதிப்பகம் :