கறுப்பர் நகரம்

ஆசிரியர்: கரன் கார்க்கி

Category நாவல்கள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 351
Weight400 grams
₹330.00 ₹313.50    You Save ₹16
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



என்னைச் சுற்றியிருந்த குப்பைக் குவியல்கள் கூட எனதுக் காட்சி அரங்குகளாக இருந்தன. தீபாவளிக்கு எனக்குக் கிடைத்தப் பட்டாசுகளை விட, நகரமெங்குமிருந்து அள்ளி வந்து கொட்டப்பட்டக் குப்பைகளில் எரிந்தும் சிதைந்தும் சரிகை மின்னும் பட்டாசுகள் கிடக்கும். இது மாதிரியான பட்டாசுகள் இருக்கிறது என்பதையே நான் அவைகைளப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். மக்களின் நுகர்வு பொருட்கள் பலவும் எனக்கு அப்படிதான் அறிமுகமானது. குப்பைகளினூடே பளபளக்கும் காலியான உறைகள் மற்றும் விதவிதமான அட்டைப் பெட்டிகள் கிடக்கும். அவைகளை பார்த்து விட்டு அதனுள் இருந்தப் பொருட்கள் எப்படியிருக்குமோ என்று கனவு காண்பேன். என் வீட்டில் அது போன்று எதையுமே நான் பார்த்ததில்லை.
என்னை சுற்றியிருந்த மக்களிடம் வறுமையும், காதலும் வாழ்வதற்கான வேட்கையும், மொழியும், வைராக்கியமும், அறியாமையும் எனப் பலவிதமான சூழல்களை நான் கண்டிருக்கிறேன். அந்த எழுபதுகளின் வடச் சென்னை காரம் சாரமானதொரு உலகமாயிருந்தது. அந்த உலகை மேலோட்டமாகப் பார்த்துப் போவதென்பது பொதுவானப் போக்காயிருக்கிறது. அன்றைய வினோதமானக் கட்டமைப்பை இனி தேடினாலும் கிடைக்காது. இப்போது அது முற்றிலும் மாறி விட்டது. சில ஆள்பவருக்கு வசதியாக மாற்றப்பட்டு விட்டது. என்னுள் உறைந்துக் கிடந்த அந்த மனிதர்களையும் அவர்களின் சூழலையும் அப்படியே பதிவு செய்ய வேண்டுமென்ற என் வேட்கையை இந்த புதினத்தில் தீர்த்துக் கொள்ள முயன்றுள்ளேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கரன் கார்க்கி :

நாவல்கள் :

பாரதி புத்தகாலயம் :