கறிக் கடைக்காரனின் சைவ மெனு கார்டு

ஆசிரியர்: வணவை தூரிகா

Category கதைகள்
Publication பரிதி பதிப்பகம்
FormatPaperback
Pages 120
ISBN978-81-93047-50-7
Weight200 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நண்பர்களே நேற்றையும் நாளையையும் மறக்க இன்று எனக்கு தமிழ் போதை தேவைப்பட்டது அதை கவிதைக்குள் ஊற்றி தான் குடித்து மயங்கி கிடந்தேன் என்ற ரகசியம் என் மனைவி கூட அறியாதது.
கொசுக்களுக்கு அடுத்தபடியாக அதிகம் பயந்தது குடி போதையில் இருப்பவர்களை பார்த்து தான், அவர்கள் என்னை பயமுறுத்த வேண்டியதேயில்லை பார்த்து பேச வந்தாலே கூட போதுமானது ஓடி ஒளிய வேறு காரணங்கள் தேவையில்லை. ஒரு நாளும் அவர்களுடன் தொழில் ரீதியாக வாழும் தருணங்கள் மட்டும் வரமாய் வந்து விடக்கூடக்கூடாது என்று ஆசை ஆசையாக பார்த்துத் பார்த்து வரைந்த என் குறைந்த பட்ச வாழ்வு குறித்த கனவு ஓவியங்களை எதிர்பார்ப்புகளுடன் நீட்டிய போது வாங்கி பார்க்க கூட மனமில்லாமல் கிழித்து வீசி வரைந்த விரல்களுக்கு சூடு வைத்தனுப்பினார் நீங்கள் இருப்பதாக சொல்லும் குரூர கடவுள்.
என் வேண்டுதல்களுக்கு பக்கத்து ஊரில் ஒரு மதுபான கடைக்கு அருகில் குடிகாரர்களுக்கு கறியும் மீனும் விற்று தொழில் செய்து கிடைக்கும் பணத்தில் களியும் சோறும் சைவமாக தின்று தொலை என்ற தண்டனையை வரமாய் தந்தனுப்பியதற்காக கண்ணீருடன் பல முறை இவ் வாழ்வை சபித்திருக்கிறேன்.
விலை உயர்ந்த கனவுகள் அல்ல என்னுடையது எளியது விலை மலிவானது அதற்கும் வாங்க முடியாத மாபெரும் விலை நிர்ணயித்து கையேந்த வைத்த இவ்வாழ்வை தான் விலை மதிப்பற்ற இக்கவிதைகளை வைத்து இதோ இப்போது பழி தீர்த்துக் கொண்டுமிருக்கிறேன்.கறிக் கடைக்காரனுக்கும் அவனது இந்த சைவ மெனு கார்டுக்குமான இந்த முரண்பாட்டு சம்பந்தத்தின் பின்னனி இவ்வளவே.

-வணவை தூரிகா.

உங்கள் கருத்துக்களை பகிர :
கதைகள் :

பரிதி பதிப்பகம் :