கரு~மை (சொல்லாய்வு நூல்)

ஆசிரியர்: ம.சோ.விக்டர்

Category ஆய்வு நூல்கள்
Publication யாத்திசைப் பதிப்பகம்
FormatPaperback
Pages 220
First EditionJan 2012
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹180.00 $7.75    You Save ₹9
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Hereதமிழின் தொடக்ககாலச் சொற்கள் எல்லாம் ஓரெ ழுத்துச் சொற்களே. அவையே பிற்காலத்தில் பலவாக விரிந்தன, தமிழில் அறியப்படும் ஓரெழுத்துச் சொற்களை, வேர்ச்சொற் கள் என்றும் கூறலாம், இவ் வேர்ச் சொற்களே பின்னர் விரிந்து மூலச் சொற்களாயின. இம் மூலச்சொற்கள் மேலும் மேலும்விரிந்து சொற்களாயின. இவ்வாறு ஒரு வேரினின்றும் விரிந்த பல சொற்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாயிருந்தன. கால ஓட்டத்தில் ஏற்பட்ட சூழல்களுக்கேற்ப அச்சொற்கள் அது குறித்த வேறு பொருளையும் தந்தன. இவ்வேறு பொருளைத் தந்த சொற்கள், அது தொடர்பான பிறசொற்களுக்கு மூலச் சொற்களாகவும் வளர்ந்தன. இவ்வாறு தமிழின் ஒரு வேர்ச்சொல், எண்ணவியலாத சொற்களை, தொடர்புள்ளதும் தொடர்பற்றதுமாகத் தந்தன. எடுத்துக் காட்டாக, தை என்ற வேர்ச்சொல், இணை என்ற பொருளைத் தருவது. ஒன்றோடொன்று பொருத்தப்படுவது தை என்ற சொல்லால் விளக்கப்படும். இரண்டு கற்களை அல்லது கட்டைகளை இணைப்பது அல்லது உரசுவது, தேய் என விரிந்தது. தேய்க்கும்போது உண்டான வெப்பம் அல்லது ஒளி, தீ எனப்பட்டது. ஞாயிறும் உடுக்களும் ஒளியைத் தருவ தால் அவையும் தீ எனப்பட்டன. தீ வெப்பத்தை வெளிப் படுத்தி ஒன்றைக் கருகவைப்பதால் அல்லது சுருங்க வைப்ப தால், தீய் என்ற சொல் பிறந்தது.

தெய்வம் என்ற சொல், உலக மொழிகளில் பல்வேறு நிலைகளில் திரிந்து Dio, Deo, Divine என்றவாறெல்லாம் விரிந்ததைக் காணலாம். தேயம் என்பது தேஷ் என்று சமற்கிருதத்தில் திரிந்தது. இவ்வாறு இணைப்பைக் குறித்த தை என்ற தமிழ் வேர்ச்சொல்லானது அதற்குத் தொடர்புடைய, தொடர்பில்லாத பல்வேறு சொற்களை உருவாக்கியுள்ளதைக் காணலாம். தமிழில் உள்ள அனைத்துச் சொற்களையும் ஆய்வு செய்தால், அது எங்கோவுள்ள ஒரு வேர்ச் சொல்லைத் தொட்டு நிற்கும், அதனால்தான் தமிழ்ச் சொற்கள் அனைத்தும் பொருள் கொண்டவையே என்று தொல்காப்பியர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ம.சோ.விக்டர் :

ஆய்வு நூல்கள் :

யாத்திசைப் பதிப்பகம் :