கரமுண்டார் வூடு

ஆசிரியர்: தஞ்சை பிரகாஷ்

Category நாவல்கள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaper Back
Pages 328
ISBN978-93-84301-83-5
Weight400 grams
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஆண் வாரிசே இல்லாமல் பெண் குழந்தைகளாகவே பிறந்து கொண்டிருந்த கரமுண்டார் வூட்டில் பெரிய கரமுண்டாருக்குப் பிறந்த காத்தாயம்பாள்தான் இந்த நாவலின் பிரதான பாத்திரம். நாவலை விவரிப்பதும் அவள்தான். அதுவும் நேரடியாக அல்ல. நாமேதான் புரிந்து கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட ப்ரகாஷே காத்தாயம் பாளாக மாறித்தான் கதை சொல்கிறார். சுமார் 300 பக்க நாவலில் காத்தாயம்பாவும் உமா மஹேஸ்வரியும், காத்தாயம்பாவும் செல்லியும் இணைகின்ற அந்தப் பெண்களின் தேகங்கள் சங்கமித்துப் பிரளயம் புரள்கின்ற பக்கங்கள் ஏராளம், ஏராளம். இந்தப் பூமியில் பிறந்த அத்தனை பெண்ணும் படிக்க வேண்டிய ஒரு நாவல் கரமுண்டார் வூடு.
பெண்ணின் தேகமும் அதன் தாபமும் மொழி வழியே இத்தனை உக்கிரமாக வெளிப்படுவதை பெண்களின் எழுத்தில் கூட இதுவரை நான் வாசித்ததில்லை . ப்ரகாஷே சொல்கிறார்: "கரமுண்டார் வூடு நாவலை நான் எழுதியபோது என் அருகே இருந்து ஒவ்வொரு அத்தியாயமாக நான் எழுத எழுத வியப்புடனும், பயத்துடனும் அவைகளையும் என்னையும் படித்துக் கண்ணீர் விட்டுக் கலைத்து என்னுடன் கூடவே எழுத்தில் பங்கு காட்டிய என் தாயார் இன்று இல்லை. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் கரமுண்டார் கோட்டை என்ற எனது பூர்விக கிராமத்தை விட்டு ஓடி வந்த எனது தந்தையாரின் தந்தை பற்றி என் பாட்டியும், பூட்டியும் சொல்லி அழுத ஒலங்கள் இன்றும் எனக்குள் இருந்தாலும் இவைகளுக்கு சாட்சியாய் இருந்து கதை காவியமாய் சொன்ன எனது அப்பாயிகள் சமாதானத்தம்மாள், துரச்சியம்மாள், மங்களத்தம்மாள் ஆகிய கிடைத்தற்கரிய மனுஷிகள் இன்று இல்லை"
ஆக, இதை எழுதியது ஒரு ஆணாக இருந்தாலும் அந்த ஆணிடம் இந்தக் கதைகளைச் சொன்னது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மூன்று கிழவிகள்தான். அவர்கள்தான் ப்ரகாஷின் அப்பாயிகள். அதனால்தான் சொல்கிறேன், இதை ஒவ்வொரு பெண்ணும் படித்தே ஆக வேண்டும் என்று.
- சாரு நிவேதிதா

உங்கள் கருத்துக்களை பகிர :
தஞ்சை பிரகாஷ் :

நாவல்கள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :