கம்பரின் கொங்கு நாட்டு மங்கள வாழ்த்து

ஆசிரியர்: உழவுக்கவிஞர் உமையவன்

Category ஆன்மிகம்
Publication ஏர்க்கலப்பை பதிப்பகம்
FormatPaper Back
Pages 48
First EditionOct 2017
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$2       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் உமையவன் ஒரு துடிப்புள்ள இளம் படைப்பாளி, குறுங்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம், சிறுகதை, கட்டுரை, ஆன்மிகம், நவீனக் கவிதைகள், நாவல் என பல்வேறு துறைகளில் இவரது எழுதுகோல் முத்திரைப் பதித்து வருகிறது. இதுவரை பல்வேறு பதிப்பகங்கள் மூலம் பத்து நூல்களுக்கு மேல் எழுதி வெளியிட்டுள்ளார், 'வண்டிமாடு' என்ற தமிழில் முதல் விவசாயம் சார்ந்த ஹைக்கூ நூலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், திறனாய்வு என பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் பங்குகொண்டு சிறப்பாக செயலாற்றி வருகிறார். கவிமாமணி, உழவுக்கவிஞர், கவிக்கதிர் போன்ற பதினைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் கலைஞர் தொலைக்காட்சியில் 'விடியலே வா' பகுதியில் சிறப்பு - விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். மேலும் பொதிகை தொலைக்காட்சியிலும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். 'ஏர்க்கலப்பை' என்கிற சமூக அமைப்பை தன் கிராமத்தில் உருவாக்கி, மரம் நடுதல், பள்ளி மாணவர்களுக்கு நூல்கள் வழங்குதல் போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு தமிழ் அறிஞர்களின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார். மேலும் இவரது கவிதைகள், படைப்புகள் பல்வேறு வார, மாத, இணைய இதழ்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :