கம்பன் புதிய பார்வை

ஆசிரியர்: அ.ச.ஞானசம்பந்தன்

Category இலக்கியம்
FormatPaperback
Pages 320
Weight400 grams
₹300.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உலக இலக்கியங்கள் பலவும், கடவுளர்களை இவ்வுலகில் வந்து தொழிற்படுமாறு செய்துள்ளன. ஆனால் ஒன்றாவது அம்முயற்சியில் வெற்றி பெற்றது என்று கூற முடியவில்லை. இதன் எதிராகக் கம்பநாடன் இம் முயற்சியை மேற்கொண்டு அதில் முழு வெற்றியும் பெற்றுவிடுகிறான்.
எனவே கம்பநாடன் சில குறிப்பிட்ட விழுப்பொருள்களை இத் தமிழ்ச் சாதிக்கு எடுத்துக் காட்டி அவர்களைத் திருத்துவதற்காகவே இக் காப்பியத்தைப் பாட எடுத்துக் கொண்டான் என்பதையும், சைவம், வைணவம் என்று சிறு வட்டத்தை விட்டு வெளிவந்து பரம்பொருள் ஒருவனே என்பதை விரிவாக அவன் பேசுகிறான் என்பதையும், வடமொழியில் உள்ள உபநிடதக் கருத்துகளைத் தமிழில் கூறிய முதற் புலவன் அவனே என்பதையும், இக் காப்பியத்தின் உயிர்நாடியாக விளங்குவது புலனடக்கத்தின் இன்றியமையாமையே என்பதையும் அறிய முடிந்தது. அதனாலேயே கம்பன் - புதிய பார்வை என்ற தலைப்பில் இந்நூல் வடிவு பெறுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அ.ச.ஞானசம்பந்தன் :

இலக்கியம் :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :