கம்பன் காவியத்தில் ஆளுமைத் திறன்கள்

ஆசிரியர்: பேரா.இரத்தின நடராசன்

Category கட்டுரைகள்
Publication ஏகம் பதிப்பகம்
FormatPaperback
Pages 144
Weight150 grams
₹55.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபேராசிரியர் இரத்தின நடராசன் சிறந்த கல்வியாளர், சிந்தனையாளர், பயிற்சியாளர் என்று பன்முகத்தன்மை கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குநர். பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் நாட்டு நலப் பணித் திட்ட கூடுதல் இயக்குநர். தமிழ்நாடு தொடர் கல்வி வாரியத்தின் செயலாளர், மாநிலப் பள்ளிசாராக் கல்விக் கருவூலத்தின் இயக்குநர். அரிமா மாவட்ட ஆளுநர். மாநிலப் பள்ளிசாராக் கல்விக் கருவூலத்தின் துணைத் தலைவர். தமிழ்நாடு தொடர்கல்வி வாரியத்தின் பொருளாளர். பல கல்வி நிறுவனங்களுக்கு பல வகைகளில் பணி புரிந்து வருகின்றார். தேசிய அளவிலும், கிராம் அளவிலும் பல்வேறு பயிற்சிகளில் தலைமைப் பயிற்சியாளராகவும், கருத்தாளராகவும் செயல்பட்டு வருகின்றார். பன்னாட்டு நியாய வாணிபம் மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர். சீபா, எஸ் ஐ எஸ் ஐ, மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் பயிற்சியாளர்.த் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், பயிற்சிகள் வாயிலாக மாணவருக்கும், ஆசிரியருக்கும், தொழில் முனைவோருக்கும் திறன்களை வளர்ப்பவர். இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களும், தொண்டு நிறுவனங்களும் இவருடைய சேவையைப் பயன்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் பல கம்பன் கழகங்கள் உள்ளன. 33 ஆண்டுகளுக்கு முன்னர், திருப்பத்தூரில் கம்பன் கழகம் தொடங்கப்பெற்றது. காரைக்குடி கம்பன் அடிப்பொடி அவர்கள் வருகை தந்து தொடங்கி வைத்தார்கள். கம்பன் கழகத்தின் நிறுவனத்தலைவர் மறைந்த கா.அ.ச. பத்மநாபன் அவர்கள், தற்போது அவர் விட்ட பணியைத் தொடர்ந்து செய்து வருபவர்கள். தலைவர் திரு.வி.ஆர். மாரிமுத்து செட்டியார், செயலாளர் நல்லாசிரியர் திரு.சு. சண்முகசுந்தரம், பொருளாளர் திரு. சி.கே.டி. திருநாராயணன் ஆகியோர். கடந்த 30 ஆண்டுகளில் வெளியிடப் பெற்ற கட்டுரைகளைத் தொகுத்து இங்கு "கம்பன் காவியத்தில் ஆளுமைத் திறன்கள்” என்ற தலைப்பில் பல அறிஞர்களின் கருத்துக்களை வழங்கியுள்ளேன். கம்பன் கவி அமுதத்தைப் பருகுங்கள். தமிழின் இனிமையை ரசியுங்கள். வாழ்க்கையில் சில நன்னெறிகளை நாம் பின்பற்றுவதற்கு இதுபெரிதும் உதவுமென நம்புகிறேன். குறுகியகாலத்தில் அச்சிட்டு ஊக்குவித்த திரு. சுப. இலட்சுமணன் அவர்கட்கும் எனது நன்றி.

உங்கள் கருத்துக்களை பகிர :
பேரா.இரத்தின நடராசன் :

கட்டுரைகள் :

ஏகம் பதிப்பகம் :