கம்பன் கண்ட தமிழகம்

ஆசிரியர்: சாமி. சிதம்பரனார்

Category கட்டுரைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 144
ISBN978-93-80218-57-1
Weight150 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கம்பன் கண்ட தமிழகம் கம்பனுடைய கவிதையின் நயத்தைப்பற்றி ஆராய்வதன்று; அவன் எடுத்துக் கொண்ட கதையின் தெய்வீகத் தன்மையைப் பற்றி ஆராய்வதன்று. கம்பன் கவிச் சிறப்பை எடுத்துக்காட்டும் நூல்கள் எத்தனையோ வெளி வந்திருக்கின்றன; கட்டுரைகள் எவ்வளவோ வெளிவந்திருக்கின்றன. இன்றும் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. அதைப்போலவே, இராம சரிதத்தின் சிறப்பைப் பற்றிப் பேசுவோர்; எழுதுவோர் எவ்வளவோ பேர் இருக்கின்றனர். ஆதலால் அந்த ஆராய்ச்சியிலே இந்நூல் தலையிடவில்லை.
இந்நூல் கம்பன் பாடிய கதைப் பகுதியைப் போற்றுவதும் அன்று; தூற்றுவதும் அன்று. அந்தப் போற்றல்-தூற்றல் போராட்டம் எப்பொழுதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும்; அது தீராத சண்டை என்றுகூடச் சொல்லி விடலாம்.
கம்பன் ஒரு உயர்ந்த கவிஞன்; ஒப்பற்ற புலவன்; நாட்டு மக்களின் கருத்தை ஒட்டி நயமான கவிதை புனைவதிலே வல்லவன்; காலப்போக்கை உணர்ந்தவன்; மக்கள் மனப் பான்மையை அறிந்தவன்; சான்றோர்களின் கொள்கையைத் தழுவியவன்; தமிழர் நாகரிகத்தையும் பண்பாட்டையும் மறவாதவன்; தமிழ் அன்னைக்குச் சிறந்த காவியமென்னும் முடி சூட்டியவன்; தமிழ்த் தாயையும், தமிழ்நாட்டையும் போற்றிப் புகழ்ந்தவன்; தமிழ் மக்கள் தவறான வழிகளிலே சென்று தடுமாறாமல் உயர்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றி ஒன்றுபட்டு வாழவேண்டும் என்ற சிறந்த சிந்தை படைத்தவன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாமி. சிதம்பரனார் :

கட்டுரைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :