கம்பன் என்றொரு நிர்வாகி

ஆசிரியர்: பழ.பழனியப்பன்

Category இலக்கியம்
Publication வானதி பதிப்பகம்
Formatpaperpack
Pages 138
First EditionMay 1999
2nd EditionAug 2000
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹30.00 $1.5    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பழ.பழநியப்பன் கம்பன் கழகம் முதலில் கால் பதித்த காரைக்குடியோன்; அந்தத் தாய்க்கழகத்தின் தற்போதைய செயலாளன். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலும் கம்பன் சேவையைச் சென்னிதனிற் பதித்தோன். கம்பன் அடிப்பொடி சா.கணேசன் அவர்களால் ஆட்கொள்ளப் பெற்று, கம்பன் அடிசூடிய செந்தமிழ்ச்சேவகன். குருநாதன் வழியில் கம்பன் விழாவைக் கொண்டாடி மகிழ்வதோடு இளந்தலை முறைப் பேச்சாளர்களையும் இனங்கண்டு எடுத்து, வளர்த்து, நாளைய அறிஞர்களை உருவாக்கியதமிழார்வலன். கம்பன் / கைங்கரியத்தோடு மட்டும் நின்று விடாமல் அவனைக் கற்று களிகொண்டு, அதனைக் கருவாக்கி, 'கம்பன் விசுவரூபம்", "கம்பனிடம் கற்போம்", "கம்பராமயணச் சுருக்கம்" என்ற புத்தகங்களில் பொதித்துத் தந்தோன் ''கட்டுரைக்களஞ்சியம்”,' 'அருள் மாலை", "ராம்-89”, ''தமிழ்த்தாய் பிரபந்தம்" என்ற தொகுதிகளைத் தொகுத்தளித்தோன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இலக்கியம் :

வானதி பதிப்பகம் :