கம்பன் எண்பது

ஆசிரியர்: கவிஞர் வாலி

Category இலக்கியம்
Pages 96
₹45.00 $2    You Save ₹2
(5% OFF)

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நமக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பட்டிதொட்டிகளிலெல்லாம் பட்டிமன்றம் நடத்த பேச்சாளர்களுக்குக் கை கொடுத்து வருகிறது கம்ப ராமாயணம்.
தசரதனில் ஆரம்பித்து விபீஷணன் வரையில் கம்ப ராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்திருக்கிறார்கள் இலக்கிய ஆர்வலர்கள். வால்மீகி ராமாயணத்துடன் கம்ப ராமாயணத்தை ஒப்பிடுவார்கள். சீதையையும் கண்ணகியையும் ஒப்பிட்டுப் பேசுவார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இப்படி அத்தனை பேரும் படைப்பைப் புகழ்ந்து கொண்டிருக்க, இந்த நூலில் படைப்பாளன் கம்பனைப் பாடுபொருளாக எடுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர் வாலி.
தன் கவிதையால் தமிழ் ஏற்றம் பெறவும், நடையில் மாற்றம் பெறவும் செய்த கம்பனுக்கு, கவிஞர் வாலி தீட்டியுள்ள ஓவியப் பாக்கள், படிக்கும்போதே பரவசப்படுத்தும்.
கம்பன் போல் பூமிதனில் யாம் கண்டதில்லை என்பது பாரதியின் வாக்கு. இங்கே கவிஞர் வாலி, கவி புனைய முனையும் கவிஞர்களுக்கு குறிப்பு தருகிறார். முதலில் கம்பனைத் தொழுது, கம்பன் கவி படித்து உள்வாங்கி, பின்னர் கவியெழுதத் தொடங்குமாறு சொல்கிறார்.
கவிச்சுவையும் சந்த நயமும் இலக்கணக் கட்டுப்பாடும் கைகோ

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் வாலி :

இலக்கியம் :

விகடன் பிரசுரம் :