கமால் அத்தார்துர்க்

ஆசிரியர்: வெ.சாமிநாத சர்மா

Category வரலாறு
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 256
Weight350 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇந்த நூலின் உள்ளடக்கத்திற்கு வர நாம் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பின் செல்ல வேண்டும். இன்றைக்கு 2011 நூறு ஆண்டுகளுக்கு முன் ஏறத்தாழ 600 ஆண்டுகளான உயர்ந்து விளங்கிய ஆட்டோமான் பேரரசு இன்றைய துருக்கி ஈராக் எகிப்து அர்மீனியா பல்கேரியா கிரீஸ ஹங்கேரி கிரிமியா, பாரசீரகம் ஈரான் அல்பேனியா பகுதிகளை உள்ளடக்கியது உடைந்து சிதறி அதன் இறங்கு முகத்தில் இருந்தது. அப்படி வலிவிழுந்த துருக்கியலிருந்து விடுதலை அடைய பல நாடுகள் முயன்றன. அவற்றைத் தூண்டி விட்டு, காலனி ஆதிக்க நாடுகள் பிரிட்டன் பிரான்ஸ் ஜெர்மனி இத்தலி தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டன. எகிப்து பிரிட்டன் வசம் சிக்கியது. லிபியா இத்தலியின் ஆதிக்கத்துக்குள் விழுந்தது. அது அன்று துருக்கியின் தலைநகரமான கான்ஸ்டாண்டிநோபிளில் பிரிட்டிஷ் படைகள் நின்று சுல்தானைக் கொண்டு பொம்மை ஆட்சி செய்யும் அளவுக்கும் சென்றது. துருக்கி சுல்தான் பல நாடுகளிலும் வாழும் இஸ்லாமிய மதத்தினருக்கும் சேர்த்துக் 'கலீபா' வாக விளங்கினார். அரசியலும் மதமும் ஒன்றாய் பிரிக்க முடியாத இந்த சூழ்நிலையில் துருக்கியில் பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் துருக்கியரைத் தட்டி எழுப்ப எழுதினர், பாடினர். ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று படித்து வந்த இளைஞர்கள் நாட்டை அந்நியர் பிடியிலிருந்து மீட்டுத் துருக்கியரின் பெருமை மீண்டும் நிலை நாட்ட இயக்கம் கண்டனர். அதில் வழக்கம் போல் பல கட்சியினர், குழப்பங்கள். இவற்றிற்கிடையே இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு இவற்றால் வீழ்ந்து விடாமல் துருக்கியரின் விடுதலையைச் சாதித்தவன் கமால் அத்தாதுர்க்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வெ.சாமிநாத சர்மா :

வரலாறு :

விஜயா பதிப்பகம் :