கமலாவின் கணவன்

ஆசிரியர்: சரத் சந்திரர்

Category நாவல்கள்
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaperback
Pages 320
First EditionJan 2007
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹200       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

இந்த நாவலுக்கு மூலத்தில் 'சேஷ பிரச்ன' என்ற பெயரிட்டுள்ளார் சரத் சந்திரர். “சேஷபிரச்ன' என்றால் கடைசிக் கேள்வி, அல்லது 'இறுதிக் கேள்வி' (Ultimate question) என்று கூறலாம்.சரத்பாபுவின் கடைசி நாவலும் இதுதான். இத்துடன் விப்ரதாஸ் என்ற நாவலையும் எழுதினார். ஆனால் அது இதற்கு முன்பே வெளிவந்துவிட்டது. “சேஷபிரச்னத்திற்கு பிறகு அவர் எழுதிய நாவல் இரண்டையும் ('சேஷேர் பரிசய்', 'ஜாகரண்') முடிக்குமுன் அவர் காலமாகிவிட்டார். ஆகவே சரத்பாபுவின் கடைசி நாவலாகத் திகழ்வது ‘சேஷபிரச்னமாகும். அவருடைய கடைசி நாவலான இதில் அவர் புதிய கருத்துக்ள் பலவற்றை, பரீட்சார்த்தமாகக் கையாண்டுள்ளார். இதன் கதாநாயகியான கமலா என்ற பெண்ணின் வாயிலாகப் பல புரட்சிக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். சரத்பாபு தான் படைத்த பெண் பாத்திரங்கள் எல்லோருடைய உள்ளத்து வேட்கையையும் கமலாவாக உருவகப்படுத்தியுள்ளார் என்பது விமர்சகர்களின் கருத்தாகும்,

உங்கள் கருத்துக்களை பகிர :